தேவையானவை :- கருவேப்பிலை - ஒரு கப் , உளுந்தம் பருப்பு - அரை கப், வரமிளகாய் - 8, உப்பு - 1 டீஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு. எண்ணெய் - 2 டீஸ்பூன். சாதம் - 1 கப்.
செய்முறை:- தலா கால் டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி உப்பைத் தவிர ஒவ்வொன்றாக வறுத்து எடுக்கவும். உப்பை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். ஆறியதும் பொடி செய்யவும். இதை அப்படியே தோசை, இட்லி போன்றவற்றுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
சாதம் செய்ய :- சாதத்தை ஒரு பௌலில் போட்டு பொடியைத் தூவவும். மேலே ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றி நன்கு கிளறி வைத்து சிறிது நேரம் கழித்து பூந்தி தயிர்ப்பச்சடி, சிப்ஸ், வற்றல்களுடன் பரிமாறவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!