வியாழன், 8 ஜூலை, 2021

6.புதினா மல்லி பிரியாணி

6.புதினா மல்லி பிரியாணி


தேவையானவை:- பச்சரிசி – 2 கப், புதினா – 1 கட்டு, கொத்துமல்லி – அரைக்கட்டு, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சைமிளகாய் – 4, இஞ்சி – 2 இஞ்ச் துண்டு, பூண்டு – 4 பல், தேங்காய் – அரை மூடி, சோம்பு, சீரகம், மிளகு, கசகசா – தலா அரை டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரிஞ்சி இலை, கல்பாசிப்பூ – சிறிது, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன்.

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து ஊறவைக்கவும். பெரிய வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். புதினா கொத்துமல்லியை சுத்தம் செய்து 1, பட்டை, 1, கிராம்பு, 1 ஏலக்காய், மிளகு, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, தேங்காய், கசகசாவோடு அரைத்து நான்கு கப் தண்ணீர் ஊற்றி வடிகட்டி அந்த நீரை மட்டும் எடுத்துக் கொள்ளவும். ப்ரஷர் பானில் எண்ணெயைக் காயவைத்து மிச்ச பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசிப்பூ, பிரிஞ்சி இலை போட்டுத் தாளித்துப் பெரிய வெங்காயம், பெரிய வெங்காயம் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.. இதில் அரிசியை வடித்துப் போட்டு நன்கு கிளறவும். உப்பைச் சேர்த்து இருநிமிடங்கள் கிளறியதும் அரைத்து வடித்து வைத்திருக்கும் புதினா கொத்தமல்லித் தண்ணீரை ஊற்றி நன்கு கலக்கவும். ப்ரஷர் பானை மூடி ஒரு விசில் வைத்து இறக்கவும். சூடாகத் தக்காளி குருமா, முட்டை மசாலாவோடு பரிமாறவும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக