9.காடை/புறா பிரியாணி
தேவையானவை:- மிளகி அரிசி – அரைக்கிலோ, காடை – 2 சுத்தம் செய்து நான்கு துண்டுகளாக வெட்டவும், பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 2, இஞ்சிபூண்டு விழுது – 2 டீஸ்பூன், பட்டை, பிரிஞ்சி இலை, கல்பாசிப்பூ, அன்னாசிப்பூ – தலா 1, கிராம்பு, ஏலக்காய் – தலா 4, பிரியாணி மசாலா – 1 டேபிள் ஸ்பூன் , மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, மிளகாய்த்தூள், மல்லித்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கொத்துமல்லி புதினாத்தழைகள் – 2 டேபிள் ஸ்பூன், தயிர் – 1 கப், நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன்.
செய்முறை:- சீரகச் சம்பா அரிசியைக் கழுவி இரண்டரை கப் நீரில் ஒருமணி நேரம் ஊறவைக்கவும். காடையைச் சுத்தம் செய்து துண்டுகள் போடவும். பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் நீளமாக நறுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெயை ஊற்றிப் பட்டை கிராம்பு ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, கல்பாசிப்பூ, போட்டுத் தாளிக்கவும். இதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பச்சை வாடை போனபின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வறுக்கவும். அது சிவந்ததும் பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், , உப்பு, மஞ்சள்தூள், தயிர், புதினா கொத்துமல்லித்தழை சேர்க்கவும். எண்ணெய் பிரியும்போது காடையைச் சேர்த்து நன்கு கிளறவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். காடை வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது சீரகச் சம்பா அரிசியை நீருடன் சேர்த்துக் கலக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் வைக்க வேண்டும். கொஞ்சம் மைதாவை எடுத்து நீர் விட்டுப் பிசைந்து பிரியாணிப்பாத்திரத்தின் ஓரத்தில் வைத்து மூடியை மூடி டைட்டாக ஒட்டி வைக்கவும். ஒரு தோசைக்கல்லில் பிரியாணிப்பாத்திரத்தை வைத்து அடுப்பை பத்துநிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். இன்னும் பத்து நிமிடங்கள் கழித்துத் திறந்து வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக