செவ்வாய், 28 டிசம்பர், 2021
கொத்துமல்லி தேங்காய் சம்மந்தி
புதன், 22 டிசம்பர், 2021
காரட் தக்காளி சூப்
சோளா பூரி
ஞாயிறு, 19 டிசம்பர், 2021
பரங்கிக்காய் புளிக்கறி
புதன், 15 டிசம்பர், 2021
தினை பாசிப்பருப்புப் பாயாசம்
ஞாயிறு, 12 டிசம்பர், 2021
கம்பு கேப்பை பூரி
வியாழன், 9 டிசம்பர், 2021
20.ரோஜாப்பூ வனிலா பாயாசம்
20.ரோஜாப்பூ வனிலா பாயாசம்
தேவையானவை:- ரோஜாப்பூ – 4, பால் – ஒரு லிட்டர்,
கார்ன் ஃப்ளோர் – 2 டேபிள் ஸ்பூன், சீனி – 2 டேபிள் ஸ்பூன், வனிலா எஸன்ஸ் – சில துளிகள்,
ரோஸ் கலர் –சில துளிகள். பாதாம், முந்திரி, பிஸ்தா – தலா 4 நெய்யில் வறுத்துப் பெரிய
துண்டுகளாகப் பொடிக்கவும்.
செய்முறை:- ரோஜாப்பூவை உதிர்த்து வைக்கவும். பாலை
நன்கு காய்ச்சி சிறிது எடுத்து ஆறவிடவும். மீதிப்பாலில் கார்ன்ஃப்ளோரையும் சீனியையும்
போட்டுப் பாதியாகும் அளவு காய்ச்சி ஆறவைக்கவும். முன்பு எடுத்த வைத்த பால் ஆறியதும்
ரோஜா இதழ்களைப் போட்டு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதை கார்ன்ஃப்ளோர் சீனி போட்டுக்
காய்ச்சிய பாலில் ஊற்றி வனிலா எஸன்ஸ், ரோஸ் கலர் சேர்த்துக் குளிர்சாதனப் பெட்டியில்
வைத்துக் குளிர்விக்கவும். வறுத்த பாதாம் பிஸ்தா முந்திரித் துண்டுகளைப் பரிமாறும்போது
கண்ணாடிக் குவளைகளில் ஊற்றி மேலாகத் தூவிக் கொடுக்கவும்.
ஞாயிறு, 5 டிசம்பர், 2021
19.கோபி பரோட்டா
19.கோபி பரோட்டா
தேவையானவை:- கோதுமை மாவு - 2 கப்,உப்பு - 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய்/நெய் - 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர், எண்ணெய் போதுமான அளவு, காலிஃப்ளவர் – 6
பூ ( பொடியாக அரிந்தது), பெரிய வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது., வரமிளகாய்த்
தூள் - 1/3 டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
செய்முறை:- கோதுமைமாவுடன் வெண்ணெய்/நெய் & உப்பைக்
கலக்கவும் தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசையவும். ஒரு ஈரத்துணியில் மூடி
ஊறவைக்கவும். பொடியாக அரிந்த காலிஃப்ளவருடன் பொடியாக அரிந்த வெங்காயம், மிளகாய்ப் பொடி,
கரம் மசாலாப் பொடியை சேர்க்கவும். மாவை 12 சம உருண்டகளாக உருட்டி கிண்ணம் போல் செய்து
அதில் ஒரு டீஸ்பூன் காலிஃப்ளவர் கலவையை வைத்து உருட்டவும். மாவில் புரட்டி கனமான பரோட்டாக்களாகச்
செய்து எண்ணெய் அல்லது நெய்யில் சுட்டெடுத்து மூங்தால் சப்ஜி (பாசிப்பயறு) யுடன் பரிமாறவும்.
புதன், 1 டிசம்பர், 2021
18.ஆலு கோபி
18.ஆலு கோபி
தேவையானவை:- உருளைக்கிழங்கு – 2, காலிஃப்ளவர் - 1 சிறியது, எண்ணெய் - 3 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் + ஆம்சூர் பொடி - 1/2 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன்.
செய்முறை:- உருளையை தோலுரித்து கழுவி விரல் அளவு துண்டுகளாக்கவும். காலிஃப்ளவரை பூக்களாய்ப் பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் போட்டு 5 நிமிடம் வைக்கவும். தண்ணீரை வடித்து பூக்களை தனியாக வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம் போடவும். பொறிந்ததும் உருளை , காலிஃப்ளவரைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். சீரகப்பொடி., மிளகாய்ப்பொடி., கரம் மசாலா பொடி., ஆம்சூர் பொடி., உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு சிம்மில் 7 நிமிடம் வேகவைத்து சூடாக சப்பாத்தி., ரொட்டி., நான்., குல்ச்சாக்களுடன் பரிமாறவும்.