ஞாயிறு, 12 டிசம்பர், 2021

கம்பு கேப்பை பூரி

கம்பு கேப்பை பூரி


தேவையானவை:- கம்பு மாவு - அரை கப், கேப்பை  மாவு ( ராகி ) - அரை கப், ஆட்டா ( கோதுமை மாவு) - அரை கப், உப்பு - 1/2 டீஸ்பூன். எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:- கம்பு , கேப்பை, ஆட்டா மாவுகளை ஒரு பௌலில் போட்டு உப்பு சேர்த்து ஒரு கப் நீர் விட்டு மென்மையாகப் பிசையவும். எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து பூரிகளாகத் தேய்த்து எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். உருளை மசால், தக்காளித் திறக்கலுடன் பரிமாறவும். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு