திங்கள், 31 ஜனவரி, 2022

முளைக்கீரைக் கூட்டு

முளைக்கீரைக் கூட்டு


தேவையானவை:- முளைக்கீரை, ஆய்ந்து கழுவி சுத்தம் செய்தது - 1 கட்டு, பாசிப்பருப்பு - 1/4 கப், பெரிய வெங்காயம், பொடியாக அரிந்தது - 1/4 கப், பூண்டு தோலுரித்து நசுக்கியது - 2 பல், சீரகம் - 1 டீஸ்பூன்,  பச்சை மிளகாய் - 1, தண்ணீர் -1/2 டம்ளர், உப்பு - ருசிக்குத் தேவையான அளவு. எண்ணெய் - ஒரு டீஸ்பூன். 

செய்முறை:- முளைக்கீரையைக் கழுவிப் பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி வைக்கவும்.அதனுடன் ஊறவைத்த பாசிப்பருப்பு., வெங்காயம்., பூண்டுப் பல்., ரெண்டாக வகிர்ந்த பச்சை மிளகாய்., ஜீரகம்., தண்ணீர் மற்றும் உப்புடன் பிரஷர் பானில் போடவும். இரண்டு விசில் சத்தம் வரும் வரை வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு பானைத்திறந்து., ஒரு மத்து அல்லது கரண்டியால் மசிக்கவும்.. சாதத்தில் நெய்யும் கீரையும் போட்டு சாப்பிடலாம் அல்லது வெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம்..
 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு