வியாழன், 28 ஏப்ரல், 2022

கொள்ளு பார்லி சூப்

கொள்ளு பார்லி சூப்



தேவையானவை:- கொள்ளு – ஒரு கப், பார்லி – அரை கப் எடுத்துத் தனித்தனியாக லேசாக வறுத்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். தக்காளி – 1, பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 2 பல், பச்சை மிளகாய் – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1 டீஸ்பூன், தண்ணீர் – 3 கப், எண்ணெய் – 1 டீஸ்பூன், கல்பாசிப்பூ, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 1, சோம்பு, சீரகம், உளுந்து, மிளகு – தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை, கொத்துமல்லி – சிறிது.

செய்முறை:- பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். ப்ரஷர் பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து சோம்பு, சீரகம், மிளகு தாளித்துப் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். இதில் வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லி போட்டு வதக்கி மஞ்சள் தூள் , உப்பு சேர்க்கவும். கொள்ளுப் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், பார்லிப் பொடி அரை டேபிள் ஸ்பூன் போட்டு மூன்று கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வைத்து இறக்கவும்.

 

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

பேபிகார்ன் சூப்

பேபிகார்ன் சூப்



தேவையானவை:- பேபிகார்ன்  - 4, வேகவைத்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்பெரிய வெங்காயம் - 1 நீளமாக நறுக்கவும்தக்காளி - 1 துண்டுகளாக்கவும்., பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைஎண்ணெய் , நெய் - 2 டீஸ்பூன்உளுந்து - 1/2 டீஸ்பூன்சோம்பு - 1/3 டீஸ்பூன்சீரகம் - 1/2 டீஸ்பூன்மிளகு - 1 டீஸ்பூன்பட்டை - 1 இன்ச்இலை - இன்ச்கல்பாசிப்பூ - 1 இன்ச்ஏலக்காய் - 1, கருவேப்பிலை - 1 இணுக்கு., கொத்துமல்லி தழை - 1 டீஸ்பூன்., உப்பு - 1 டீஸ்பூன்பால் - 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:-

 

பேபிகார்னை மெல்லிய  வட்டத் துண்டுகளாக வெட்டவும்ஒரு பானில் எண்ணெய்நெய் ஊற்றி உளுந்துசோம்புசீரகம்., மிளகுகல்பாசிப்பூ., பட்டை., இலை., ஏலக்காய் போட்டு தாளிக்கவும்அதில் வெங்காயம்தக்காளி., கருவேப்பிலை., பச்சை மிளகாய்பேபிகார்ன் போட்டு நன்கு வதக்கவும்துவரம்பருப்பை நன்கு மசித்து 3 கப் தண்ணீர் ஊற்றி உப்புமஞ்சள் தூள் சேர்த்து பானில் ஊற்றவும்கொதி வந்ததும் சிம்மில் மூடி போட்டு 7 நிமிடம் வேக விடவும்பால் ஊற்றி கொத்துமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

 

வியாழன், 21 ஏப்ரல், 2022

சிகப்பு சோயா பிரட்டல்

சிகப்பு சோயா பிரட்டல்



தேவையானவை :- சிவப்பு சோயா/பட்டர் பீன்ஸ் –  1 கப் உரித்ததுபெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, சோம்பு மிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டிஉப்பு – கால் தேக்கரண்டிஇஞ்சி பூண்டு பேஸ்ட் – கால் டீஸ்பூன் ( தேவைப்பட்டால் ), எண்ணெய் – 3 டீஸ்பூன்பட்டைகிராம்புஇலை – சிறிது.

செய்முறை:- சிவப்பு பட்டர்பீன்ஸை உரித்து குக்கரில் போட்டு ஒரு விசில் வரும்வரை வேகவிடவும்எண்ணெயில் பட்டைஇலைகிராம்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்இதில் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு வதக்கி அதில் சோம்பு மிளகாய்த்தூளும் உப்பும் சேர்த்து திறக்கவும்இதில் தக்காளியையும் போட்டு வதக்கி வேகவைத்த பட்டர்பீன்ஸை தண்ணீருடன் ஊற்றவும்.  நன்கு வெந்ததும் இறக்கவும்.

 

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

மல்லாட்டைச் சட்னி

மல்லாட்டைச் சட்னி



தேவையானவை:- வரமிளகாய் – 3, வேர்க்கடலை வறுத்துத் தோல் நீக்கியது - 1 கைப்பிடிஉப்பு - 1/2 டீஸ்பூன்புளி - 1 சுளைபெரிய வெங்காயம் – 1, எண்ணெய் - 2 டீஸ்பூன்கடுகு - 1/4 டீஸ்பூன்உளுந்து - 1/2 டீஸ்பூன்கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- வெறும் வாணலியில் வரமிளகாய்வேர்க்கடலையை லேசாக வறுக்கவும்அதன் பின் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கவும்வெங்காயத்துடன் மிளகாய்வேர்க்கடலைஉப்புபுளி போட்டு நன்கு அரைக்கவும்சட்னி பதத்திற்குத் தேவையான தண்ணீர் ஊற்றவும்ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகுஉளுந்துகருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

 

புதன், 13 ஏப்ரல், 2022

கொள்ளுப் பொரியல்

கொள்ளுப் பொரியல்



தேவையானவை :- கொள்ளு - அரை கப்சின்ன வெங்காயம் -2, பூண்டு - 1 பல்வரமிளகாய் 1, உப்பு - கால் டீஸ்பூன்எண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு -கால் டீஸ்பூன்

செய்முறை:- வெறும் வாணலியில் கொள்ளை வாசம் வரும்வரை வறுத்து நீர் விட்டுக் களைந்து குக்கரில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று விசில் வரும்வரை வேகவிடவும்நீரை வடிக்கவும். வரமிளகாய் சின்ன வெங்காயம் பூண்டை உப்போடு அரைத்து வைக்கவும்ஒரு பானில்  எண்ணெய்யைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் அரைத்த மசாலாவையும் கொள்ளையும் போட்டு உடனே அடுப்பை அணைக்கவும்மசாலா அதிகம் வேகக் கூடாது. உடல் எடையைக் குறைக்கும்.

 

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

கறுப்பு உளுந்து தோசை

கறுப்பு உளுந்து தோசை



தேவையானவை:- இட்லி அரிசி – 2 கப், கறுப்பு உளுந்து – அரை கப், உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 100 மிலி

செய்முறை:- இட்லி அரிசியையும் கறுப்பு உளுந்தையும் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு மைய அரைத்து உப்பு சேர்த்துக் கரைத்து எட்டுமணி நேரம் புளிக்க விடவும். தோசைக்கல்லில் ஊத்தப்பம் போல் ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டுத் திருப்பிப் போட்டு எடுத்துக் காரச் சட்னியுடன் பரிமாறவும்.

 

வியாழன், 7 ஏப்ரல், 2022

ஃபலாஃபல்

ஃபலாஃபல்



தேவையானவை :- வெள்ளைக் கொண்டைக்கடலை ( காபூலி சன்னா) – 2 கப், மைதா – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும். கொத்துமல்லித்தழை – கால் கப், வெள்ளை எள் – 1 டேபிள் ஸ்பூன் , சீரகம், 1 டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு – 5 பல், ஏலப்பொடி – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- வெள்ளைக் கொண்டைக் கடலையைக் கழுவி 12 மணி நேரம் ஊறவைக்கவும். நீரை வடித்து மிக்ஸியில் கொண்டைக் கடலை, மைதா, பெரிய வெங்காயம், கொத்துமல்லித் தழை, சீரகம், மிளகு, பூண்டு, மிளகாய்த்தூள், ஏலப்பொடி, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். வடைகளாகத் தட்டி வெள்ளை எள்ளில் புரட்டி வைத்து எண்ணெயைக் காயவைத்துப் பொன்னிறமாகப் பொரிக்கவும். மயோனிஸுடன் பரிமாறவும்.

 

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

சோளே க்ரேவி

சோளே க்ரேவி



தேவையானவை :- பச்சைக் கொண்டைக்கடலை – 1 கட்டு, பெரிய வெங்காயம் - 1, வெள்ளைப் பூண்டு - 4 பல், இஞ்சி – 2 இன்ச் துண்டு, தக்காளி 1 , சிவப்பு மிளகாய்த்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன், மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்,சீரகப் பொடி – அரை டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன், பட்டை - 1 இன்ச்,, கிராம்பு  - 1, ஏலக்காய் - 1., சீரகம் – 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:- பச்சைக் கொண்டைக்கடலையை உரித்துக் கொள்லவும். இஞ்சி பூண்டை மைய அரைக்கவும். வெங்காயம் தக்காளியைத் தனித்தனியாக அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டை வதக்கவும். அது சிவந்ததும் அரைத்த தக்காளி மசாலாப் பொடிகள், உப்பு சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்ததும் பச்சைக் கொண்டைக் கடலை, உப்பு போட்டுத் தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும். இறக்கி பட்டுராவுடன் பரிமாறவும்.