கொள்ளுப் பொரியல்
தேவையானவை :- கொள்ளு - அரை கப், சின்ன வெங்காயம் -2, பூண்டு - 1 பல், வரமிளகாய் 1, உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு -கால் டீஸ்பூன்
செய்முறை:- வெறும் வாணலியில் கொள்ளை வாசம் வரும்வரை வறுத்து நீர் விட்டுக் களைந்து குக்கரில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று விசில் வரும்வரை வேகவிடவும். நீரை வடிக்கவும். வரமிளகாய் சின்ன வெங்காயம் பூண்டை உப்போடு அரைத்து வைக்கவும். ஒரு பானில் எண்ணெய்யைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் அரைத்த மசாலாவையும் கொள்ளையும் போட்டு உடனே அடுப்பை அணைக்கவும். மசாலா அதிகம் வேகக் கூடாது. உடல் எடையைக் குறைக்கும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!