காலிதால் மாக்னி
தேவையானவை:- கருப்பு உளுந்து இரண்டாக உடைத்தது - 1 கப், ராஜ்மா - 1/4 கப் ( விரும்பினால்), பெரிய வெங்காயம் - 2 பொடியாக அரியவும்., இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், தக்காளி - 2 பொடியாக அரியவும்., பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை, சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:-ராஜ்மாவையும் கறுப்பு உளுந்தம் பருப்பையும் தோலுடன் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும். 3 கப் தண்ணீர் ஊற்றி ப்ரஷர் குக்கரில் 3 விசில் வரும்வரை வேக விடவும். ஒரு பானில் எண்ணெயைச் சூடாக்கி அதில் பெருங்காயம், சீரகத்தைத் தாளிக்கவும். சீரகம் வெடித்ததும் வெங்காயம் போட்டு ப்ரவுனாகும் வரை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். பின் தக்காளி, உப்பு, சிவப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், போட்டு வதக்கி வெந்த உளுந்தைச் சேர்க்கவும் . 5 நிமிடம் வேகவைத்து க்ரீமை மத்தால் நன்கு கடைந்து ஊற்றவும். நெய்யைக் காயவைத்து ஊற்றி நன்கு கலக்கிப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக