பீட்ரூட் பயறு தோசை
தேவையானவை :- பச்சைப் (பாசிப்) பயறு - 200 கிராம்., பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது., பீட்ரூட் - 1 /8 துண்டு., பச்சை மிளகாய் – 1, பூண்டு - 3 பல், இஞ்சி - 1 இன்ச் துண்டு, மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன், துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லி இலை - 1 டீஸ்பூன், ஜீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 20 கிராம்.
செய்முறை :-
பாசிப்பயறை முதல்நாள் பகலில் கழுவி ஊறவைத்து முளை கட்டவும். மறுநாள் முளைவிட்ட பயறு., பச்சை மிளகாய்., இஞ்சி., பூண்டு., மிளகாய்ப் பொடி., உப்பு., ஜீரகம்., தேங்காய்த்துருவல்., பீட்ரூட்., கொத்துமல்லித்தழை., வெங்காயம் எல்லாம் போட்டு கரகரப்பாக அரைக்கவும் . மெல்லிய தோசைகளாகச் சுட்டு எடுத்துக் கதம்பச் சட்னியோடு பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக