செவ்வாய், 13 செப்டம்பர், 2022

8. ஒடியல் கூழ்

8. ஒடியல் கூழ்.


 

தேவையானவை:- பனங்கிழங்கு மாவு – இரண்டு கப், அரிசி, உளுந்து தலா – 1 டேபிள் ஸ்பூன், தட்டைப் பயித்தங்காய் – 6, பலாக் கொட்டை – 10, பூசணிக்காய் – ஆறு துண்டு, மரவள்ளிக்கிழங்கு – 1, முருங்கை இலை – ஒரு கைப்பிடி, உப்பு – 2 டீஸ்பூன், புளி – ஒரு நெல்லி அளவு, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 4, சின்ன வெங்காயம் – 4.

 

செய்முறை:- ஒடியல் மாவை நீரூற்றிக் கலந்து ஊறவைக்கவும். தட்டைப் பயித்தங்காய், பலாக்கொட்டை, பூசணிக்காய் மரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக்கவும். அரிசி உளுந்தைக் கழுவி நான்கு கப் நீரூற்றி வேகவிடவும். பாதி வெந்ததும் காய்களைச் சேர்க்கவும். காய்களும் வெந்ததும் உப்புப் புளிக் கரைத்து ஊற்றவும். மிளகு, சீரகம், வரமிளகாய், சின்ன வெங்காயத்தை அரைத்துச் சேர்க்கவும். ஒடியல் மாவின் நீரை வடித்துவிட்டுச் சேர்த்து முருங்கைக் கீரையையும் போட்டுப் பத்து நிமிடம் வெந்ததும் இறக்கவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு