புதன், 21 டிசம்பர், 2022

அசோகா :-

அசோகா :-


தேவையானவை :- பாசிப்பருப்பு – 1 கப் , கோதுமை மாவு – 1 கப்,  எண்ணெய் - அரைகப், நெய் – கால் கப், டால்டா - கால் கப், சர்க்கரை – ஒன்றரைகப். முந்திரி பாதாம் கிஸ்மிஸ் – தலா 8, ஏலக்காய் – 2 தோலோடு பொடிக்கவும். ரெட் ஃபுட் கலர் - சிறிது.

செய்முறை :- பாசிப்பருப்பை வேகவிடவும். நன்கு வெந்ததும் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும். கோதுமை மாவை எண்ணெயைக் காயவைத்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதில் நீர்க்கக் கரைத்த பாசிப்பருப்பை ஊற்றவும். இரண்டும் சேர்ந்து சுருண்டு வரும்போது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். கலர்ப்பொடி சேர்க்கவும், நெய்யை உருக்கி அதில் முந்திரி பாதாம் கிஸ்மிஸை வறுக்கவும். உருக்கிய மிச்ச நெய்யையும் டால்டாவையும்  அல்வாவில் அவ்வப்போது ஊற்றிக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருள வந்ததும் இறக்கி முந்திரி பாதம் கிஸ்மிஸை சேர்க்கவும். ஏலப்பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

 

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு