புதன், 12 ஏப்ரல், 2023

கடாரங்காய் சாதம்

கடாரங்காய் சாதம்

தேவையானவை:- கடாரங்காய் – 2, வடித்த சாதம் – ஒரு கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க:- கடுகு, உளுந்து கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:- கடாரங்காயை இரண்டாக நறுக்கிச் சாறுபிழிந்து உப்பும் மஞ்சள் பொடியும் போட்டு வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, கடலைப்பருப்புத் தாளித்து இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும். நன்கு வறுபட்டதும் கடாரங்காய்ச் சாறை ஊற்றி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் இதில் சாதத்தைப் போட்டுக் கிளறவும். 

கடாரங்காய் பித்தம் போக்கும். பசியைத் தூண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக