செவ்வாய், 18 ஏப்ரல், 2023

கருவேப்பிலைச் சட்னி

கருவேப்பிலைச் சட்னி


தேவையானவை:- கொழுந்து கருவேப்பிலை – 1கட்டு, சின்ன வெங்காயம் – 10, வரமிளகாய் – 4, உப்பு – அரை டீஸ்பூன், புளி – 2 சுளை, தாளிக்க:- எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:- கொழுந்து கருவேப்பிலையோடு வரமிளகாய், உப்பு, புளி சேர்த்து மைய அரைத்து அரை கப் நீரில் கரைத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை உரித்து வட்ட வட்டமாக நறுக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து தாளித்து வெங்காயத்தை நன்கு வதக்கவும். இதில் அரைத்த கருவேப்பிலை விழுதைக் கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம். 


வயிறு மந்தம், பசியின்மையைப் போக்கும். செரிமானம் கொடுக்கும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக