புதன், 23 ஆகஸ்ட், 2023

தூதுவளை ரசம்

தூதுவளை ரசம்


 

தேவையானவை :-தூதுவளை – 1 கட்டு , வேகவைத்த துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், புளி – 1 நெல்லிக்காய் அளவு, உப்பு – ½ டீஸ்பூன், வரமிளகாய் – 2, மிளகு – 1/2 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, மல்லித்தூள் – ½ டீஸ்பூன், மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன், பூண்டுப்பல் – 2, கடுகு – 1 டீஸ்பூன், வெந்தயம் – ½ டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன்

 

செய்முறை:- தூதுவளைக் கீரை முள்ளுடன் இருக்கும் கீரையை மட்டும் பார்த்து ஆய்ந்து கழுவி வைக்கவும். உரலில் மிளகாய், மிளகு சீரகம் பொடித்து பூண்டு தூதுவளைக் கீரையை வைத்து ஒன்றிரண்டாக நைத்து வைக்கவும். புளியை ஊறவைத்து இரண்டு கப் சாறு எடுத்து உப்பு சேர்த்து வைக்கவும். பருப்பை கடைந்து புளித்தண்ணீரில் சேர்க்கவும். அதில் மஞ்சள் தூளையும் மல்லித் தூளையும் போடவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், வெந்தயம் பெருங்காயப் பொடி போடவும். அதில் நைத்த விழுதைப் போட்டு அரை நிமிடம் வதக்கி புளித்தண்ணீரை ஊற்றவும். நுரைத்துப் பொங்கி வரும்போது கொதிக்கவிடாமல் இறக்கி உபயோகிக்கவும். இது சள்ளைக் கடுப்பை நீக்கும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக