செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

வெற்றிலை நெல்லிக்காய் ரசம்

வெற்றிலை நெல்லிக்காய் ரசம்


 

தேவையானவை:-முழு நெல்லிக்காய் - 4, ,வெற்றிலை - 8,

கருவேப்பிலை கொத்துமல்லி – ஒரு கைப்பிடி. , வரமிளகாய் – 2, வெள்ளைப்பூண்டு – 3 பல், குறு மிளகு – ½ டீஸ்பூன், சீரகம் _ ½ டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – ½ டீஸ்பூன்.

 

செய்முறை:- நெல்லிக்காயைக் கொட்டை நீக்கிச் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் ஊற்றாமல் மிளகாய், பூண்டு வால்மிளகு சீரகம் ஆகியவற்றை கடாயில் வறுத்து அதில் சுத்தம் செய்து நறுக்கிய கருவேப்பிலை, கொத்துமல்லி, வெற்றிலை போட்டு மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதை ஆறவைத்து அரைத்து எண்ணெயில் வதக்கவும். அரைத்த நெல்லிக்காய் பேஸ்டையும் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றவும். உப்பைப் போடவும். நுரைத்துக் கொதிவரும் நிலையில் கொதிக்குமுன் இறக்கி வடிகட்டிக் கொடுக்கவும். இது சளியைப் போக்கும்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக