செவ்வாய், 19 டிசம்பர், 2023

7.முருங்கைக்காய் கத்திரிக்காய் பச்சடி

7.முருங்கைக்காய் கத்திரிக்காய் பச்சடி



தேவையானவை:- முருங்கைக்காய் - 2., 3 இன்ச் துண்டுகளாக நறுக்கவும், கத்திரிக்காய் - 4 குறுக்கே கிராசாக நறுக்கவும்., சின்ன வெங்காயம் - 8 உரித்து நெட்டாக நறுக்கவும்., பச்சை மிளகாய் - 2 . ரெண்டாக வகிரவும், வேகவைத்த துவரம் பருப்பு - 1 கப், புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 1 1/2 டீஸ்பூன், சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1/8 இன்ச் துண்டு, வரமிளகாய் - 2 இரண்டாக கிள்ளிவும், கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- ஒரு பானில் வெந்த பருப்புடன் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் முருங்கைக்காய்., கத்திரிக்காய்., சின்ன வெங்காயம்., பச்சைமிளகாய்., மஞ்சள் பொடி., சாம்பார் பொடி., பெருங்காயம் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். புளியை அரை கப் தண்ணீரில் உப்புடன் கரைத்து காய்கள் வெந்ததும் சேர்க்கவும். 3 நிமிடம் கொதித்து சேர்ந்ததும் ஒரு இரும்புக் கரண்டியில் ( தாளித்துக் கொட்டும் கரண்டி) எண்ணெய் ஊற்றி கடுகுபோட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். தாளித்ததை பச்சடியில் கொட்டி சூடாக சாதத்தோடோ., தயிர்சாதத்தோடோ., இட்லி., தோசையோடோ பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக