15.இஞ்சிப்புளித் தொக்கு
தேவையானவை:- இஞ்சி – 200 கி, பச்சை மிளகாய் – 50 கி, புளி – 1 பெரிய எலுமிச்சை அளவு, உப்பு – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,கடுகு - 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 50 கிராம், வெல்லம் – 50 கி, கருவேப்பிலை – 1 இணுக்கு.
செய்முறை:- இஞ்சியைத் தோல்சீவிக் கழுவிப் பொடியாகத் துருவவும். பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கவும். உப்புப்புளியை அரை கப் தண்ணீரில் கரைக்கவும். பானில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு போட்டுப் பொறிந்ததும் கருவேப்பிலை, இஞ்சி , பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி மஞ்சள்தூள் சேர்த்துக் கரைத்த உப்புப்புளியை ஊற்றவும். கொதித்து சுண்டும்போது வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக