வியாழன், 11 ஜூலை, 2024

10.கசாந்திபி

10.கசாந்திபி


தேவையானவை:- பால் – 600 மிலி, ஹெவி க்ரீம் – 20 மிலி, அரிசி மாவு – தலை தட்டி 2 ஸ்பூன், கார்ன் ஸ்டார்ச் – தலைதட்டி ஒரு ஸ்பூன், சீனி – அரை கப், மாஸ்டிக் கம் – ஒரு சிறு துண்டு.

செய்முறை:- ஒரு சாஸ்பேனில் பாலும் க்ரீமும் சேர்த்து நன்கு நுரை வர அடிக்கவும். இதில் அரிசி மாவு, கார்ன் ஸ்டார்ச், சீனி, மாஸ்டி கம் ஆகியவற்றைச் சேர்த்து மென்மையாகும் வரை அடிக்கவும். சாஸ்பேனை அடுப்பில் வைத்து திக்காகும் வரை காய்ச்சவும். இதை இன்னொரு தட்டையான நான் ஸ்டிக் பேனில் ஊற்றி ஹை ஃப்ளேமில் கீழ்ப்புறம் கேரமலைஸ் ஆகும்வரை வைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். கஸ்டர்டை நான்காக ஸ்லைஸ் செய்து ரோல் செய்து பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக