சனி, 20 ஜூலை, 2024

12.லோகும்

12.லோகும்



தேவையானவை:- சீனி – 4 கப், தண்ணீர் – ஒன்றரை கப், எலுமிச்சைத் துண்டு – 1, மாதுளை – 4, தண்ணீர் – 1 கப், கார்ன்ஸ்டார்ச் – 1 கப், ஜெலாட்டின் – 10 கிராம், காய்ந்த தேங்காய்த்துருவல் – 1 கப், உடைத்த முந்திரி – கால் கப்.

செய்முறை:- நாலு கப் சீனியில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி எலுமிச்சைத் துண்டைப் போட்டு நன்கு கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைத் துண்டை நீக்கவும். நான்கு மாதுளைகளைப் பிழிந்து சாறு எடுத்து வடிகட்டவும். இது இரண்டு கப் அளவு இருக்க வேண்டும். இதை ஒரு பானில் ஊற்றி அதில் கார்ன் ஸ்டார்ச், ஜெலாட்டின், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும். திக்காக ஆகும்போதெல்லாம் சீனி சிரப்பை ஊற்றிக் கிளறி வரவும். 45 நிமிடங்கள் கிளறியபின் இறுகி வரும்போது உடைத்த முந்திரி சேர்த்துக் கிளறவும். ஒரு கண்ணாடி பௌலில் தேங்காய்த்துருவலை அடர்த்தியாகத் தூவி அதில் லோகுமைப் பரப்பவும். மேலேயும் தேங்காய்த்துருவலைத் தூவி சிறிது ஆறவிடவும். கூர்மையான கத்தியால் இரண்டு இஞ்ச் சதுரத் துண்டுகளாக வெட்டித் தேங்காய்த்துருவலில் புரட்டிப் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக