14.மாங்கொட்டைப் பருப்புக் குழம்பு
தேவையானவை:- மாங்கொட்டைப் பருப்பு – 2 ( மாங்காய் கொட்டையை உரித்து காயவைத்த பருப்பு ), சின்ன வெங்காயம் – 10 உரித்து பொடியாக நறுக்கவும்., வெள்ளைப்பூண்டு – 8 உரித்துப்பொடியாக நறுக்கவும், தக்காளி – 1 பொடியாக நறுக்கவும்., புளி – 1 நெல்லி அளவு, உப்பு – 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை., சாம்பார் பொடி – 2 டீஸ்பூன் அல்லது மிளகாய் – 6 மல்லி – 1 டேபிள் ஸ்பூன், மிளகு சீரகம் து பருப்பு தலா ஒரு டீஸ்பூன் போட்டு வெறும் வாணலியில் வறுத்து அரைத்து வைக்கவும்., எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன்.
செய்முறை:- மாங்கொட்டைப் பருப்பை வெந்நீரில் ஊறப்போடவும். புளியையும் உப்பையும் ஊறவைத்து 3 கப் சாறெடுத்துச் சாம்பார் பொடி அல்லது அரைத்த மசாலா பொடிபோட்டுக் கரைத்து வைக்கவும்.மாங்கொட்டைப் பருப்பை நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து வெந்தயம் போட்டுச் சிவந்ததும் வெங்காயம் வெள்ளைப்பூண்டு தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். சுருள வதங்கியதும் அரைத்த மாங்கொட்டைப் பருப்பு விழுதைப் போடவும். அரை நிமிடம் வதக்கி மஞ்சள் பொடி போட்டு மசாலாப்பொடியோடு கரைத்து வைத்த புளியை ஊற்றவும். கொதிவந்ததும் அடக்கி சிம்மில் வைத்து 15 நிமிடம் கழித்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக