9. மாவடு இஞ்சி சாதம்
தேவையானவை:- உதிராக வடித்த சாதம் – 1 கப், மாவடு இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் துருவியது, எண்ணெய் – 3 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், வேர்க்கடலை – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, உப்பு – ½ டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – 1 டீஸ்பூன்.
செய்முறை:- பானில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும். வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை போடவும். சிவந்ததும் வரமிளகாய், பச்சைமிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும். அதில் மாவடு இஞ்சித் துருவலைப் போட்டு உப்பும் மஞ்சள் பொடியும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். எல்லாம் சேர்ந்ததும் இறக்கி ஆறவைத்து ஆறிய சாதத்தை உதிர்த்துச் சேர்க்கவும். அதில் எலுமிச்சை சாறும் கொத்துமல்லித்தழையும் போட்டுக் கலந்துவிட்டுக் கொஞ்ச நேரம் மூடி வைத்திருந்து உபயோகிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக