வியாழன், 31 ஜூலை, 2025

கருப்பட்டிக் கொழுக்கட்டை

கருப்பட்டிக்  கொழுக்கட்டை.


தேவையானவை :- பச்சரிசி - 4 ஆழாக்குகருப்பட்டி - 200 கிவெல்லம் - 200 கிஒரு முழுத் தேங்காய் - துருவவும்., எள்ளு - 2 டீஸ்பூன்உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:- பச்சரிசியைக் கழுவிக் காயவைத்து மாவாகச் சலிக்கவும்வெல்லம் கருப்பட்டியை நைத்துப் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி லேசாக சுடவைத்துக் கரைத்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்ஒரு பெரிய பேசினில் பச்சரிசி மாவைப் பரப்பி அதில் எள்தேங்காய்த் துருவல் , உப்பைத் தூவவும்கருப்பட்டி வெல்லப் பாகை வடிகட்டி அதில் ஊற்றிக் கரண்டிக் காம்பால் கிளறவும்நன்கு சேர்ந்ததும் கையால் நன்கு மென்மையாகப் பிசைந்து பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக