ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

பழக் கொழுக்கட்டை

பழக் கொழுக்கட்டை


தேவையானவை :- பச்சரிசி மாவு – 2 கப்பழக்கலவை – பொடியாக நறுக்கிய ஆப்பிள்சிறுமலைப்பழம்பலாச்சுளை – ஒரு கப்கிஸ்மிஸ் – 30, பேரீச்சை – 6, தேன் – ஒரு டேபிள் ஸ்பூன்.உப்பு – 1 சிட்டிகைசர்க்கரை – ஒரு சிட்டிகைநெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- ஒன்றேகால் கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து நெய்யையும் உப்பையும் சேர்க்கவும்மாவைக் கொட்டிக் கரண்டிக் காம்பால் குத்திக் கிளறி ஈரத்துணியால் மூடிவைக்கவும்ஆறியதும் நன்கு பிசைந்து கொழுக்கட்டை செய்ய உபயோகிக்கவும்பழக்கலவையோடு பொடியாக அரிந்த பேரீச்சைகிஸ்மிஸ்தேன் கலந்து நன்கு கையால் மசித்து உருட்டி வைக்கவும்கொழுக்கட்டை மாவில் சொப்பு செய்து இந்த பழக்கலவையை ஃபில்லிங்காக நிரப்பிக் கொழுக்கட்டையை மூடி ஆவியில் பத்துநிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக