கேழ்வரகு அவல் கேசரி
தேவையானவை:- கேழ்வரகு அவல் – 1 கப், தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – அரைகப், உப்பு 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன், முந்திரி, கிஸ்மிஸ் – தலா 6, ஏலப்பொடி -1 சிட்டிகை.
செய்முறை:- கேப்பை அவலை நீரில் நனைத்துக் களைந்து இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஒரு பானில் நெய் ஊற்றி முந்திரி கிஸ்மிஸைப் போட்டு வறுத்து எடுத்து அதில் கேழ்வரகு அவல், தேங்காய்த் துருவல், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கிளறவும். ஒன்று சேர்ந்ததும் ஏலப்பொடி, முந்திரி கிஸ்மிஸைச் சேர்த்து இறக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக