வெள்ளி, 29 அக்டோபர், 2010

PUDINA PULAV.. .. புதினா புலவ்...

PUDINA PULAV:-
NEEDED :-
BASMATHY RICE - 1 CUP
BIG ONION - 1 ( CHOPPED)
TOMATO - 1 ( CHOPPED )

TO GRIND :-
PUDINA (PEPPERMINT) LEAVES - 1 BUNCH
CORRIANDER LEAVES - 1 HAND FUL
GREEN CHILLY - 1 0R 2 NO.
COCONUT - 3 INCH SQUARE.
GINGER - 1 INCH PIECE
GARLIC - 4 PODS
SOMPH - 1 TSP
JEERA - 1/2 TSP
BLACK PEPPER - 10 NOS.

TO FRY :-
OIL - 1 TBLSN
CINNAMON - 1 INCH PIECE
CARDAMOM - 1
CLOVE - 2
BAY LEAVES - 1 INCH PIECE
ANNASI PUU - 1

METHOD :-
WASH AND CLEAN THE CORRIANDER AND PUDINA LEAVES .. ADD ALL THE OTHER INGREDIENTS AND GRIND THEM WELL. ADD 2 TUMBLERS OF WATER AND FILTER IT . AND TAKE THE WATER FOR MAKING THE RICE.
WASH THE RICE. HEAT OIL IN A PAN ADD CINNAMON., CARDAMOM., BAY LEAVES ., CLOVES AND ANNASIP PUU. ADD THE ONION AND TOMATO SAUTE FOR 2 MINUTES AND ADD RICE . ADD SALT AND THE FILTERED WATER. STIRR WELL AND KEEP THE COOKER FOR ONE OR TWO WHISTLE . REMOVE FROM FIRE ANDAFTER 10 MINUTES SERVE HOT WITH CUCUMBER CARROT SALAD ., AND PINEAPPLE RAITHA., AND BOILED EGGS AND POTATO CHIPS.

புதினா புலவ்:-
தேவையானவை :-
பாசுமதி அரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
தக்காளி - 1 பொடியாக அரிந்தது

அரைக்க:-
புதினா - 1 கட்டு
கொத்துமல்லி - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
தேங்காய் - 3 இன்ச் துண்டு
இஞ்சி - 1 இன்ச் துண்டு
பூண்டு - 4 பல்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 10

தாளிக்க :-
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - 1 இன்ச் துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
இலை - 1 இன்ச் துண்டு
அன்னாசிப் பூ - 1

செய்முறை :-
புதினா., கொத்துமல்லியை கழுவி ., சுத்தம் செய்து மற்ற பொருட்களுடன் போட்டு நன்கு அரைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அரிசியை நன்கு களையவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து பட்டை ., கிராம்பு., ஏலக்காய்., இலை., அன்னாசிப்பூ எல்லாம் தாளிக்கவும். அதில் வெங்காயம்., தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். அரிசியை சேர்க்கவும். உப்பு சேர்த்து அரைத்த தண்ணீரை சேர்க்கவும். நன்கு கிளறி ஒன்று அல்லது இரண்டு விசில் வைத்து குக்கரை இறக்கவும். பத்து நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து சூடாக புதினா புலவை வெள்ளரி காரட் சாலட்., பைன் ஆப்பிள் ரெய்த்தா., அவித்த முட்டை., உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக