புதன், 2 பிப்ரவரி, 2011

INCHI PULI.. இஞ்சிப் புளி..

INCHI PULI :-
NEEDED:-
GINGER - 100 GMS
GREEN CHILLIES - 50 GMS
TAMARIND - 1 LEMON SIZE BALL.
SALT - 1 TSP
OIL - 1 TBL SPN
MUSTARD - 1 TSP
FENUGREEK - 1/4 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH
RICE FLOUR - 1 TSP.
JAGGERY OR SUGAR - 1/2 TSP OPTIONAL

METHOD :-
SOAK TAMARIND IN HALF CUP WATER AND TAKE THE PULP. WASH AND CUT THE CHILLIES AND GINGER INTO STICKS. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD FENUGREEK AND ASAFOETIDA . THEN ADD CHILLIES AND GINGER . SAUTE WELL. POUR THE TAMARIND PULP. ADD SALT. BRING TO BOIL. AFTER 5 MINUTES KEEP IT IN SIM AND ADD THE RICE FLOUR MIXED WITH LITTLE WATER. IF DESIRED ADD JAGGERY OR SUGAR. COOK TILL TENDER. SERVE HOT WITH CURD RICE AND CHAPPATIS.

இஞ்சிப் புளி:-
தேவையானவை:-
இஞ்சி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 50 கிராம்
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை.
அரிசி மாவு - 1 டீஸ்பூன்.
வெல்லம் அல்லது சீனி - 1/2 டீஸ்பூன் விரும்பினால்.

செய்முறை :-
புளியை அரை கப் நீரில் கரைத்து சாறெடுக்கவும். இஞ்சியையும்., பச்சை மிளகாயையும் கழுவி குச்சிகளாக நறுக்கவும். பானில் எண்ணெயை காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் வெந்தயம்., பெருங்காயப் பொடி போடவும். பச்சை மிளகாய்., இஞ்சி போட்டு நன்கு வதங்கியதும் புளிச்சாறை ஊற்றவும். உப்பு போடவும். அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஊற்றவும். விரும்பினால் சீனி அல்லது வெல்லம் போடவும். நன்கு மென்மையாக வெந்ததும் தயிர் சாதம் அல்லது சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

    பதிலளிநீக்கு