NEEDED:-
INDIAN PENNYWORT - 1 HANDFUL
GREEN CHILLIES - 3 NOS (SLIT OPEN)
GRATED COCONUT - 1 CUP
BIG ONION - 1 NO
TAMARIND - 2 PODS.
SALT - 1/2 TSP
OIL - 2 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 2 TSP
ASAFOETIDA - 1/10 INCH PIECE.
METHOD:-
WASH THE INDIAN PENNY WORT AND KEEP ASIDE. PEEL WASH AND CHOP THE ONION. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD ASAFOETIDA AND CHILLIES AND CHOPPED ONION. SAUTE WELL. ADD SALT., TAMARIND., GRATED COCONUT. SWITCH OFF THE STOVE THEN ADD THE INDIAN PENNYWORT. AND STIRR WELL. AFTER COOLING GRIND IT . SERVE IT WITH IDDLIES OR DOSAS OR WITH VARIETY RICES.
ITS GOOD FOR MEMORY POWER.
வல்லாரைத்துவையல்:-
தேவையானவை:-
வல்லாரை - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 3
துருவிய தேங்காய் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
புளி - 2 சுளை
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/10 இஞ்ச் துண்டு.
செய்முறை:-
வல்லாரையை நன்கு அலசி வைக்கவும். வெங்காயத்தை தோலுரித்துக் கழுவிப் பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும். உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயம்., பச்சை மிளகாய்., வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். உப்பு., புளி., தேங்காய் போட்டு வதக்கி அடுப்பை அணைக்கவும். பின் அதில் வல்லாரையைப் போட்டு நன்கு கலக்கவும். ஆறியபின் துவையலாக அரைத்து இட்லி., தோசை., அல்லது கலவை சாதங்களுடன் பரிமாறவும்.
வல்லாரை ஞாபக சக்தியைத் தூண்ட வல்லது.