வியாழன், 16 ஆகஸ்ட், 2012

FILTER COFFEE. ஃபில்டர் காஃபி

FILTER COFFEE:-

NEEDED:-
NARASUS PEABERRY COFFEE POWDER- 25 GM
COFFEEDAY ARABICAH COFFEE POWDER - 25 GM
MILK - 1 CUP
SUGAR 2 TSP
WATER - 1 CUP

METHOD:-
PLACE THE NARASUS AND COFFEEDAY COFFEE POWDERS IN THE SILVER FILTER/COFFEE PERCOLATOR. PLUG IN AND POUR 1 CUP WATER.YOU WILL GET THE HOT DECOCTION IN 5 MINUTES AT THE BOTTOM OF THE VESSEL. HEAT MILK. TAKE 2 TSP OF SUGAR IN A TUMBLER ADD THE NEEDED AMOUNT OF FILTERED DECOCTION AND POUR THE HOT MILK. POUR BACK AND FORTH BETWEEN THE DABARAH AND TUMBLER TILL FROTHY AND SERVE HOT.

ஃபில்டர் காஃபி:-
தேவையானவை:-
நரசுஸ் பீபெரி காஃபித்தூள் - 25 கி
காஃபிடே அராபிகா காஃபி பொடி - 25 கி
பால் - 1 கப்
ஜீனி - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:-
நரசுஸ் & காஃபிடே காஃபி பொடிகளை சில்வர் ஃபில்டர் அல்லது காஃபி மேக்கரில் போடவும். காஃபி பர்கொலேட்டர் என்றால் ப்ளக்கை சொருகி தண்ணீரை ஊற்றவும். ஃபில்டர் என்றால் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஊற்றவும். 5 நிமிடங்களில் டிகாக்‌ஷன் கீழ்ப்புற பாத்திரத்தில் வடிந்திருக்கும். பாலை சூடாக்கவும். 2 டீஸ்பூன் சக்கரையை ஒரு டம்ளரில் போட்டு தேவையான டிகாக்‌ஷனை ஊற்றி பாலையும் ஊற்றி நுரை வர ஆற்றிக் கொடுக்கவும்.


திங்கள், 13 ஆகஸ்ட், 2012

PIRANDAI ( CISSUS QUADRANGULA ) THUVAIYAL. பிரண்டைத் துவையல்.


PIRANDAI THUVAIYAL:-

NEEDED:- 
PIRANDAI  - 1 HANDFUL ( WASHED CLEANED AND CHOPPED)
RED CHILLIES - 4 NO
BIG ONION - 1 CHOPPED FINELY
GRATED COCONUT - 4 TBLSPN
SALT - 1 TSP
TAMARIND - 1 AMLA SIZE BALL

TO FRY:-
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
ASAFOETIDA - 1/8 INCH PIECE

METHOD:-
HEAT OIL IN A KADAI AND SAUTE THE PIRANDAI WELL AND KEEP ASIDE. THEN HEAT OIL IN ANOTHER KADAI ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BROWNS ADD ASAFOETIDA POWDER, RED CHILLIES, CHOPPED ONION, SALT. TAMARIND AND COCONUT POWDER. SAUTE FOR 2 MINUTES AND OFF THE STOVE. THEN ADD THE PIRANDAI AND STIRR WELL. KEEP ASIDE FOR COOL. AFTER 10 MINUTES GRIND WELL AND SERVE IT WITH IDDLIES OR DOSAS OR RICE WITH GHEE.

பிரண்டைத் துவையல்:-

தேவையானவை:-
பிரண்டை - 1 கைப்பிடி கணு ஆய்ந்து நரம்பு உரித்து கழுவி நறுக்கி வைக்கவும்.
வர மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்.
தேங்காய்த்துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
புளி - 1 சுளை

தாளிக்க:-
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இன்ச் துண்டு

செய்முறை:-
கடாயில் முதலில் எண்ணெய் விட்டு பிரண்டையை நன்கு வதக்கி ஆறவிடவும். பின் இன்னொரு கடாயில் கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து பெருங்காயம் சேர்த்து சிவந்ததும் வரமிளகாய் வெங்காயம் போட்டு வதக்கவும். உப்பு , புளி தேங்காய்த்துருவலைப் போட்டு வதக்கி அடுப்பை அணைத்து அந்த சூட்டிலேயே திரும்பப் பிரண்டையைச் சேர்த்து வதக்கி கிளறி ஆறவிட்டு துவையலாய் அரைத்துப் பரிமாறவும்.

SMALL ONION COCONUT THUVAIYAL. சின்ன வெங்காயம் தேங்காய்த்துவையல்.

SMALL ONION COCONUT CHUTNEY:-

NEEDED:-
RED CHILLIES -  4 NOS
GRATED COCONUT - 1 CUP
SMALL ONION - 10 NOS. PEELED
TAMARIND - 2 PODS
SALT - 1/2 TSP

METHOD:-
MIX ALL THE INGREDIENTS AND GRIND COARSLY WITH LITTLE WATER AND SERVE IT WITH DOSA OR IDDLIES.

சின்னவெங்காயம் தேங்காய் சட்னி:-’


தேவையானவை:-
சிவப்பு மிளகாய் - 4
துருவிய தேங்காய்  - 1 கப்
சின்ன வெங்காயம் - 10. தோலுரித்தது
புளி - 2 சுளை
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:-
எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து தோசை அல்லது இட்லியுடன் பரிமாறவும். 



CORIANDER DOSAI. கொத்துமல்லி தோசை

CORIANDER DOSAI:-

NEEDED:-
DOSA FLOUR - 4 TBLSPN.
CORIANDER LEAVES - 1 BUCNCH, CLEANED AND CHOPPED.
SALT - IF NEEDED
OIL - 4 TSP

METHOD:-
SPREAD DOSA FLOUR IN A DOSA PAN, SPRAY ONE HANDFUL OF CORRIANDER LEAVES. DROP OIL AROUND THE DOSA.TURN THE OTHERSIDE AND COOK FOR ONE MINUTE. SERVE HOT.

கொத்துமல்லி தோசை:-
******************

தேவையானவை:-
தோசை மாவு - 4 கரண்டி
கொத்துமல்லித்தழை - 4 கைப்பிடி பொடியாக அரிந்தது.
உப்பு - தேவைப்பட்டால்
எண்ணெய் - 4 டீஸ்பூன்

செய்முறை:- தோசைக்கல்லில் மாவை ஊற்றி, கொத்துமல்லியைத் தூவி, சுற்றி எண்ணெய் விட்டுத் திருப்பி வேகவைத்துப் பரிமாறவும்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

CASHEW FRY. வறுத்த முந்திரி

CASHEW FRY:-
NEEDED:-
CASHEWS( WHOLE) - 100 GMS
GHEE - 1 TBLSPN
PEPPER POWDER - 1 TSP
SALT - 1/4 TSP

METHOD:- HEAT GHEE IN A KADAI. FRY THE CASHEWS TO A LITTLE BROWN. SPRAY PEPPER POWDER AND SALT. SERVE HOT.

வறுத்த முந்திரி:-
தேவையானவை:-
முழு முந்திரிப் பருப்பு - 100 கி
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்

செய்முறை:- ஒரு வாணலியில் நெய்யை சூடாக்கவும். அதில் முந்திரிப் பருப்புகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரிக்கவும். நெய்யை வடியவிட்டு மிளகுத்தூள், உப்பு தூவி குலுக்கிவிட்டுப் பரிமாறவும்.

புதன், 1 ஆகஸ்ட், 2012

DHALL BOLI. பருப்பு போளி:-

DHALL BOLI:-
NEEDED:-
MAIDA - 2 CUPS
CHANNA DHALL - 1 CUP
SUGAR - 1/2 CUP
GHEE - 2 TBLSPN
TIL OIL - 100 GMS
SALT - 1 PINCH
TURMERIC POWDER - 1 PINCH
BAKING SODA - 1/4 TSP ( OPTIONAL)
WHITE FLOUR - 1 TBLSPN FOR DUSTING.

METHOD:-
SEIVE MAIDA WELL AND ADD THE SALT,TURMERIC POWDER AND BAKING SODA . MAKE INTO A SOFT DOUGH WITH NEEDED AMOUNT OF WATER. DIVIDE THEM INTO 16 PARTS AND ROLL THEM AS A BALL. ARRANGE THEM IN A BOWL AND POUR THE OIL. KEEP ASIDE AND MARINATE FOR ONE HOUR.

WASH THE CHANNA DHALL AND PRESSURE COOK FOR 3 WHISTLES. TAKE IT OUT AND ADD THE SUGAR AND KEEP IT IN STOVE TILL THE SUGAR MELTS. GRIND IT FINELY IN A GRINDER. DIVIDE THEM INTO 16 PARTS AND ROLL THEM INTO BALLS.

SHAPE THE MAIDA BALLS INTO CUPS AND KEEP THE DHALL BALLS INSIDE EACH OF IT AND COVER IT.  SPREAD THEM AS CHAPPATIS BY DUSTING WITH WHITE FLOUR. HEAT TAWA AND ROAST BOTH SIDES OF BOLI BY SPRAYING GHEE. SERVE HOT.

பருப்பு போளி:-
தேவையானவை:-
மைதா - 2 கப்
கடலைப் பருப்பு - 1 கப்
ஜீனி - 1/2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 100 கி
உப்பு - 1 சிட்டிகை
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன் ( விரும்பினால்)
மைதா - 1 டேபிள் ஸ்பூன் தூவ

செய்முறை:-
மைதாவை சலித்து உப்பு, மஞ்சள் பொடி, பேக்கிங் பவுடரை சேர்க்கவும். தேவையான தண்ணீர் தெளித்து மென்மையான மாவாக பிசையவும். 16 சம பாகங்களாகப் பிரித்து உருட்டவும். ஒரு பவுலில் அடுக்கி எண்ணெயை ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

கடலைப் பருப்பை கழுவி பிரஷர் குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவிடவும். வெளியே எடுத்து அதனுடன் ஜீனியை சேர்த்து அடுப்பில் வைக்கவும். ஜீனி கரைந்ததும் எடுத்து கிரைண்டரில் போட்டு நன்கு அரைக்கவும். இந்த பூரணத்தை எடுத்து 16 சமபாகங்களாகப் பிரித்து உருட்டி வைக்கவும்.

மைதா உருண்டைகளைக் கிண்ணங்களாகச் செய்து பூரணத்தை வைத்து மூடவும். மைதா மாவில் தொட்டு சப்பாத்திகளாக இடவும். தோசைக்கல்லைக் காயவைத்து நெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சூடாக போளிகளைப் பரிமாறவும்.