செவ்வாய், 22 ஜனவரி, 2013

CHOLE PURI சோளே பூரி

CHOLE PURI:-

FOR PURI:-

NEEDED:-
ATTA - 1 CUP
MAIDA - 1 CUP
SOOJI - 1 CUP
SALT - 1/2 TSP
OIL FOR FRYING.

METHOD:-
ADD ALL THE INGREDIENTS EXCEPT OIL. POUR ENOUGH WATER AND KNEAD WELL. KEEP COVERED FOR 10 MINUTES. MAKE EQUAL SIZE BALLS , ROLL THEM AND FRY THEM IN HOT OIL.

FOR CHOLE:-

NEEDED:-
CHANNA/RAW GREEN CHANNA- IS CALLED CHOLE) - 1 CUP
BIG ONION PASTE - 1 TBLSPN
GINGER GARLIC PASTE - 2 TSP
TOMATO PASTE/PUREE - 1 TBLSPN
ANAR DHANA ( POMEGRANATE SEEDS) - 1 TSP POWDERED.
TIL - 1 TSP POWDERED. ( OPTIONAL)
RED CHILLI POWDER - 1 TSP
CORIANDER POWDER - 1 TSP
TURMERIC POWDER - 1 PINCH
GARAM MASALA - 1/2 TSP
OIL - 2 TSP
JEERA - 1 TSP
SALT - 1/2 TSP
SUGAR - 1/4 TSP.

METHOD:-
SOAK CHANNA FOR 12 HOURS. PRESSURE COOK FOR 5 WHISTLES. HEAT OIL IN A PAN. ADD JEERA. ADD ONION PASTE AND SAUTE TILL IT BECOMES BROWN. ADD GINGER GARLIC PASTE & SAUTE  TILL OIL SEPERATES. ADD ANAR DHANA,TILL, SALT,SUGAR, RED CHILLI POWDER, CORIANDER POWDER, TURMERIC,GARAM MASALA, ADD TOMATO PASTE AND SAUTE FOR 2 MINUTES. ADD THE CHOLE OR COOKED CHANNA. ADD ENOUGH WATER. COOK TILL DONE AND SERVE HOT WITH PURI. ADD SOME CHOPPED CORRIANDER AND ONION FOR ADDITIONAL TASTE.

சோளே பூரி:-

பூரி செய்ய:-

தேவையானவை:-
ஆட்டா - 1 கப்
மைதா - 1 கப்
ரவா - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
எண்ணெயைத் தவிர எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு சில்வர் பேசினில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும். ஒரு ஈரத்துணியைப் போட்டு 10 நிமிடங்கள் ஊற விடவும். சம அளவு உருண்டைகள் செய்து பெரிய சைஸ் சப்பாத்திகளாகத் திரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சோளே செய்ய:-

தேவையானவை:-
கொண்டைக்கடலை கறுப்பு/வெள்ளை/பச்சை - பச்சையாக இருந்தால் அதன் பெயர் சோளே. - 1 கப்
பெரியவெங்காய பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சிபூண்டு மசாலா - 2 டீஸ்பூன்
தக்காளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
அனார் தானா ( மாதுளைவிதைப் பொடி ) - 1 டீஸ்பூன்
எள்பொடித்தது - 1 டீஸ்பூன்
வரமிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
கொத்துமல்லிப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சீனி - 1/4 டீஸ்பூன்

செய்முறை:-
கொண்டைக்கடலையை பன்னிரெண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிரஷர் குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகத்தைப் போடவும். அதில் வெங்காயப் பேஸ்டைப் போட்டு சிவக்கும் வரை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கி அனார் தானா, எள், உப்பு, சீனி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, தக்காளி பேஸ்ட் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி வேகவைத்த சன்னா அல்லது பச்சை சோளேயைப் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சூடாக பூரியுடன் பரிமாறவும். பொடியாக அரிந்த கொத்துமல்லி, வெங்காயம் தூவி பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக