செவ்வாய், 2 ஏப்ரல், 2013

BROAD BEANS SAMBAR. அவரைக்காய் சாம்பார்.

BROAD BEANS SAMBAR.

NEEDED:-
BROAD BEANS - 200 GMS
SMALL ONION - 6 NOS
TOMATO - 1 NO
BOILED THUVAR DHAL - 1 CUP
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 TSP
RED CHILLI POWDER - 2 TSP
CORIANDER POWDER - 2 TSP
TURMERIC POWDER - 1 PINCH
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
JEERA - 1/2 TSP
ASAFOETIDA  POWDER - 1 PINCH
CURRY LEAVES - 2 ARK
CHOPPED CORIANDER LEAVES  - 1 TSP

METHOD:-
REMOVE THE NERVES AND CUT THE BROAD BEANS INTO  2 INCH PIECES.  PEEL AND CUT THE ONION ,& TOMATO. SOAK TAMARIND IN 3 CUPS OF WATER WITH SALT. SQEEZE THE PULP & ADD THE TURMERIC POWDER, RED CHILLI POWDER & CORIANDER POWDER.

PRESSURE COOK THE THUVAR DHAL , BEANS,ONION, TOMATO WITH A PINCH OF ASAFOETIDA AND TURMERIC POWDER. AFTER ONE WHISTLE REMOVE THE COOKER FROM FIRE. AFTER COOLING OPEN THE LID AND ADD THE TAMARIND PULP. COOK FOR 7 MINUTES.

HEAT ONE TSP OIL IN A  IRON LADLE. ADD MUSTARD, JEERA, ASAFOETIDA POWDER, RED CHILLIES AND CURRY LEAVES. TOSS THAT IN THE BOILING SAMBAR. SERVE HOT WITH  PLAIN RICE WITH  APPALAMS  AND URULAI  MASALA.

NOTE:- FOR ADDITIONAL TASTE  GROUND 2 PODS OF GARLIC, 1/2 TSP JEERA. 1 TSP POPPY SEEDS . ADD THIS PASTE TO THE BOILING SAMBAR AND OFF THE GAS. ADD CHOPPED CORIANDER TOO.

அவரைக்காய்  சாம்பார்:-

தேவையானவை.:-
அவரைக்காய்  - 200 கி
சின்ன வெங்காயம் - 6
தக்காளி - 1
வேகவைத்த துவரம் பருப்பு
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
கருவேப்பிலை - 1 இணுக்கு
கொத்துமல்லி பொடியாக அரிந்தது - 1 டீஸ்பூன்

செய்முறை:-
அவரைக்காயை  நரம்பை நீக்கி  2 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். சின்ன வெங்காயத்தைத்  தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும்.

ப்ரஷர் பானில் வேகவைத்த பருப்பு,, அவரைக்காய் , சி. வெங்காயம், தக்காளி போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். ஒரு விசில் சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து புளிக்கரைசலை ஊற்றவும். 7 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  அடுப்பை அணைக்கவும்.

ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில்  கொட்டி சூடான  சாதம், அப்பளம் , உருளை மசாலாவுடன் பரிமாறவும்.

குறிப்பு :- மேலும் சுவை கூட்ட :-  இரண்டு பல் பூண்டு, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் கசகசாவை அரைத்து கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும். பொடியாக அரிந்த கொத்துமல்லியும் தூவலாம்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு