செவ்வாய், 29 அக்டோபர், 2013

CURRY LEAVES, GINGER, TURKYBERRY THUVAIYAL. கருவேப்பிலை, இஞ்சி, சுண்டைக்காய்த் துவையல்

CURRY LEAVES, GINGER, TURKYBERRY THUVAIYAL.

NEEDED:-
CURRY LEAVES - 1 HANDFUL ( TENDER)
GINGER - 2 INCH ( PEELED & CHOPPED)
TURKYBERRY  BIG - 20 NOS
GRATED COCONUT - 1 TBLSPN
BIG ONION - 1 NO ( PEELED AND CHOPPED)
GREEN CHILLIES - 4 NOS.
TAMARIND - 3 PODS
SALT - 1/3 TSP
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 3 TSP
ASAFOETIDA - 1/8 INCH PIECE.

METHOD:-
CUT THE TURKEY BERRY AND WASH IT IN WATER. HEAT OIL IN A PAD. ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ASAFOETIDA AND ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD GREEN CHILLIES AND  TURKY BERRY. SAUTE FOR 2 MINUTES . THEN ADD CHOPPED GINGER, ONION, AND CURRY LEAVES. SAUTE FOR A MINUTE. THEN ADD  GRATED COCONUT, SALT AND TAMARIND. SAUTE WELL FOR 2 MINUTES. REMOVE FROM FIRE.

AFTER COOLING GROUND COARSLY WITH LITTLE WATER AND SERVE IT DOSAS AND IDDLYS AND WITH PLAIN RICE AND GHEE. OR WITH CURD RICE.

 கருவேப்பிலை, இஞ்சி, சுண்டைக்காய்த் துவையல்:-

தேவையானவை :_
கருவேப்பிலை - 2 கைப்பிடி ( இளசு)
இஞ்சி - 2 இன்ச் ( தோல் சீவிக் கழுவிப் பொடியாக அரியவும் )
சுண்டைக்காய் - 20 முற்றியது.
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 தோலுரித்துப் பொடியாக அரியவும்.
பச்சை மிளகாய் - 4
புளி - 3 சுளை
உப்பு - 1/3 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 3 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இன்ச் துண்டு.

செய்முறை:-
சுண்டைக்காய்களை இரண்டாக வெட்டித் தண்ணீரில் போடவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் உளுந்து பெருங்காயம் போட்டு சிவந்ததும் பச்சைமிளகாய், சுண்டைக்காயைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின் இஞ்சி, வெங்காயம், கருவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கி தேங்காய், உப்பு, புளி சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவும்.

ஆறியவுடன் லேசாக தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து இட்லி, தோசை, நெய் சாதம் அல்லது தயிர்சாதத்தோடு பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக