திங்கள், 29 டிசம்பர், 2014

மார்கழி நிவேதனங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில் RECIPES FOR DECEMBER

இவை டிசம்பர் 1 - 15, 2014, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. 

திருவாதிரைக் களி:-

தேவையானவை :-
பச்சரிசி – 1 கப் கழுவி காயவைத்து ரவையாகப் பொடிக்கவும்.
பாசிப்பருப்பு – ¼ கப் சிவக்க வறுத்து ரவையாகப் பொடிக்கவும்.
கடலைப் பருப்பு - ¼ கப் சிவக்க வறுத்து ரவையாகப் பொடிக்கவும்
வெல்லம் – 200 கி
தேங்காய் – 1 மூடி துருவவும்
நெய் – 30 கி
முந்திரி – 5 இரண்டாக ஒடிக்கவும்.
கிஸ்மிஸ் – 10
உப்பு – 1 சிட்டிகை
ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை.

செய்முறை:-
3 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து வெல்லத்தைத் தட்டிப் போட்டுக் கரைந்ததும் வடிகட்டி ஊற்றிக் கொதிக்க விடவும். அதில் அரிசி பருப்பு ரவைகளைத் தூவிக்கொண்டே கிளறவும். உப்பும்,10 கிராம் நெய்யும் ஊற்றவும். கட்டி படாமல் கிளறி ப்ரஷர் பானில் போட்டு ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்துப் போட்டுக் களியில் கொட்டி ஏலப்பொடி தூவி மிச்ச நெய்யையும் ஊற்றிக் கிளறி நைவேத்தியம் செய்யவும்.

2. திருவரங்கத்து நெய் அப்பம் :-

தேவையானவை :-
கோதுமை மாவு – 2 கப்
தூள் வெல்லம் – 3/4 கப்
நெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

கிருஷ்ண ஜெயந்தி, வரலெக்ஷ்மி விரதம், ஸ்பெஷல் நைவேத்தியங்கள்,KRISHNA JEYANTHI, VARALAKSHMI VIRATHAM RECIPES

ட்ரைஃப்ரூட்ஸ் பேணி, வெஜிடபிள் பேணி மூங்க்தால் கிச்சடி, பழ அப்பம். ---வரலெக்ஷ்மி விரத ஸ்பெஷல் :-

ஓட்ஸ் லட்டு, கார்ஃப்ளோர் உருண்டை, பாப்கார்ன் பர்ஃபி, கிருஷ்ணப் ப்ரஸாத்.----
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல். :

வரலெக்ஷ்மி விரத ஸ்பெஷல் :-

1.ட்ரைஃப்ரூட்ஸ் பேணி:-

வெறும் தேங்காய்வெல்லம் பூரணத்துக்குப் பதிலாக இப்படியும் இனிப்புக் கொழுக்கட்டை செய்யலாம்.

தேவையானவை:-
பச்சரிசி – 2 கப்

ஃபில்லிங் :-
பாதாம் -15
பிஸ்தா – 15
முந்திரி – 15
பேரீச்சை – 6
கிஸ்மிஸ் – 30
செர்ரி – 10
டூட்டி ஃப்ரூட்டி – 1 டேபிள் ஸ்பூன்
கொப்பரை – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
மேல்மாவு.
பச்சரிசியை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து நன்கு சலிக்கவும். ஒரு பாத்திரத்தில் 1 1/4 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு  ஒரு சிட்டிகை உப்புப் போட்டு மாவைத் தூவிப் பிசையவும்.. பந்துபோல உருண்டுவந்ததும் இறக்கி ஒரு ஈரத்துணியைப் போட்டு மூடிவைக்கவும்.

ஃபில்லிங்க் செய்ய பாதாம் முந்திரியை ஊறவைத்து துண்டுகளாக நறுக்கவும். பேரீச்சை பிஸ்தாவையும் நறுக்கவும். செர்ரியை கொட்டை எடுத்து சின்னதாக நறுக்கவும். கொப்பரையை லேசாக வாசம் வரும் பக்குவம் வறுத்து டூட்டி ஃப்ரூட்டி, கிஸ்மிஸ் எல்லாவற்றையும் சேர்த்து தேன் ஊற்றிக் கலந்து பதினாறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

புதன், 10 டிசம்பர், 2014

புதன் முதல் சனி வரை நிவேதனங்கள் WEDNESDAY, THURSDAY, FRIDAY, SATURDAY RECIPES

4. கிருஷ்ணப் ப்ரசாதம். – புதன் பெருமாள்

இது இஸ்கான் கோயிலில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட சுருள் பூரி டைப் இனிப்பு. ஆனால் நீள அப்பளப்பூவை மடித்து ஒன்றின் மேல் ஒன்று ஒட்டியது போலச் செய்வது.

வியாழன், 13 நவம்பர், 2014

ஞாயிறு முதல் செவ்வாய் வரை நிவேதனங்கள், RECIPES FOR SUNDAY, MONDAY & TUESDAY

ஞாயிறு முதல் செவ்வாய் வரை நிவேதனங்கள் :-

1.கறுப்பு உளுந்து மிளகு வடை :- ஞாயிறு ஹனுமான்.

தேவையானவை :-

கறுப்பு உளுந்து – 1 கப்
மிளகு – 1 டீஸ்பூன்
உப்பு – 1/3 டீஸ்பூன்.
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

கறுப்பு உளுந்தைத் தோலோடு கழுவி ஊறவைக்கவும். 10 நிமிஷம் ஊறியதும் மிக்ஸியில் உப்பு மிளகு போட்டு கொரகொரப்பாக ஆட்டிக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். ஒரு பாலிதீன் பேப்பரில் எண்ணெய் தடவி மாவை உருட்டி வைத்து இன்னொரு எண்ணெய் தடவிய பாலிதீன் பேப்பரால் மூடி நன்கு மெலிசாகத் தகடுபோல் தட்டவும்.

வியாழன், 6 நவம்பர், 2014

குமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்கந்தர் சஷ்டி. SKANDAR SASHTI RECIPES

1. ஓட்ஸ் லட்டு:-

தேவையானவை. :-

ஓட்ஸ் – 1 கப்
சன்ன வெள்ளை ரவை – 1 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
ஜீனி – ½ கப்
பேரீச்சை – 2
முந்திரி – 8


செய்முறை:-
ஓட்ஸை வெறும் பானில் 5 நிமிடம் சிம்மில் வைத்து வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் ஒரு நிமிடம் போட்டுப் பொடிக்கவும். வெள்ளை ரவையையும் லேசாக வாசம் வரும் பக்குவம் வெள்ளையாகவே வறுத்து இறக்கவும். ஜீனியைப் பொடித்து வைக்கவும். பேரீச்சையைப் பொடியாக அரிந்து வைக்கவும். முந்திரியை சிறுதுண்டுகளாக உடைத்து வைக்கவும்.

வியாழன், 16 அக்டோபர், 2014

தீபாவளி சிறப்பு நிவேதனங்கள். DIWALI SPECIAL RECIPES.



1.சந்த்ரகலா சூர்யகலா:-
தேவையானவை:-
மைதா – 2 கப்
பால் கோவா – 2 கப்
சீனி – 2 கப்
முந்திரி – 20
திராக்ஷை – 20
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 4
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

புதன், 15 அக்டோபர், 2014

நவராத்திரி ரெசிப்பீஸ். NAVRATHRI RECIPES





இந்த  நவராத்திரி ரெசிப்பீஸ் செப்டம்பர் 16 - 30, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

1.சீரக சாதம் :-
தேவையானவை:-
சீரக சம்பா அரிசி/ பாசுமதி அரிசி/பச்சரிசி- 1 கப்
சீரகம் – 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 10
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1/3 டீஸ்பூன்
செய்முறை:-
சீரக சம்பா, பாசுமதி. பச்சரிசி இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஒரு கப் எடுத்துக் களைந்து வைக்கவும். ஒரு பானில் நெய் ஊற்றி சீரகம், முந்திரி தாளிக்கவும். முந்திரியை எடுத்து விட்டு அரிசியை வதக்கி இரண்டு கப் தண்ணீர் ஊற்றி உப்புப் போட்டு இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். ஆறியதும் திறந்து முந்திரி சேர்த்து நிவேதனம் செய்யவும்.

2.மிளகு சாதம்:-
தேவையானவை:-
சீரக சம்பா சாதம்  - 2 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து – 2 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
செய்முறை:- சீரக சம்பா அரிசியைக் களைந்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்து ஒரு பேசினில் உதிர்த்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் உளுந்தை வாசனை வரும் பக்குவத்தில் வறுத்து மிளகை கடைசியில் சேர்த்து லேசாக வறுத்து இறக்கவும். உப்புடன் சேர்த்துப் பொடித்து சாதத்தில் தூவி நெய்யை உருக்கி ஊற்றிக் கலந்து நிவேதிக்கவும்.

3. கேரட் புட்டு:-
தேவையானவை:-
பாசிப்பருப்பு – 1 கப்
கேரட் – 1 கப் துருவியது
தேங்காய் – ½ கப் துருவியது
வெல்லம் – ½ கப் துருவியது
ஏலப்பொடி – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை.

செவ்வாய், 14 அக்டோபர், 2014

ஓணம் ஸ்பெஷல் நிவேதனங்கள். ONAM RECIPES


இந்த ஓணம் ஸ்பெஷல் நிவேதனங்கள் செப்டம்பர் 1 - 15, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

1.பருப்புக்கறி:-
தேவையானவை :-
பாசிப்பருப்பு – 1 கப்
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
உப்பு – 1/3 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்

திங்கள், 13 அக்டோபர், 2014

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் நிவேதனங்கள்.VINAYAGAR CHATHURTHI RECIPES

இந்த நிவேதனங்கள் ஆகஸ்ட் 16 - 31, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

1.ஃப்ரூட் & நட்ஸ் மோதகம்.

தேவையானவை:

பச்சரிசி ரவை – 2 கப்,
வெல்லத்தூள் – 1 1/2 கப்,
பேரீச்சை – 2
கிஸ்மிஸ் – 10
டூட்டி ப்ரூட்டி – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 6
பாதாம் – 4.
நெய் – ¼ கப்
தேங்காய் துருவல் – ஒரு மூடி.
ஏலக்காய் - 3


செய்முறை:

கடாயில்  நெய்யை ஊற்றி பச்சரிசி ரவையை வாசம் வரும்வரை வறுத்து 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு சவுண்டு வரும்வரை வேகப்போடவும்.


பொல பொலவென உப்புமா போல உதிர்த்துக் கொள்ளவும். அதில் ஏலத்தைப் பொடித்து தேங்காய்த் துருவலுடன் கலக்கி வைத்துக் கொள்ளவும். 


வெல்லத்தை சிறிது வெந்நீரில் கரைத்து வடிகட்டி கொதிக்கவைத்து ரவையில் சேர்க்கவும். தண்ணீர் அளவும் வெல்லப்பாகும் சரியாகச் சேர்த்தால் உருண்டை பிடிக்க வரும். நீர்க்க இருந்தால் அடுப்பில் வைத்துக் கிளறவும். 


இறுகியதும் இறக்கி டூட்டி ப்ரூட்டி, பொடியாக நறுக்கிய பேரீச்சை, கிஸ்மிஸ், வறுத்து ஒடித்த பாதாம் முந்திரி, கலந்து. மாவை நன்கு பிசறி நெய் தொட்டு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து நிவேதனம் செய்யவும். 

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

குட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES

1.ஒயிட் ஃப்ரைட் ரைஸ்:-
தேவையானவை :-
சாதம் (பாசுமதி அல்லது பச்சரிசி) - 1 கப்.
சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால் கிளறி ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு ஆற வைக்கவும்.
பெரிய வெங்காயம் - 1. நீளமாக அரிந்தது.
குடைமிளகாய் - 1 . நீளமாக அரிந்தது.
காரட் - 1 . நீளமாக துருவியது
பீன்ஸ் - 1 . நீளமாக அரிந்தது
முட்டைக்கோஸ் - 50 கி. நீளமாக துருவியது.
எண்ணெய் - 4 டீஸ்பூன்
சீனி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
வெள்ளை மிளகுப் பொடி - 1/4 டீஸ்பூன்

செய்முறை :-
கடாயில் எண்ணெயைக் காயவைக்கவும்..
ஸ்டவில் தீ அதிக அளவில் இருக்க வேண்டும்..
வெங்காயம்.,பீன்ஸ்., குடை மிளகாய்., முட்டைக்கோஸ்., காரட் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
இதில் சீனி., உப்பு., அஜினோமோட்டோ., வெள்ளை மிளகுத்தூள் சேர்க்கவும்.
உதிரியான சாதத்தைச் சேர்த்து நன்கு கிளறவும்.
சாஸ் மற்றும் உருளை ஃப்ரென்ச் ஃப்ரையுடன் சூடாகப் பரிமாறவும்.

2. கருவேப்பிலை சாதம். :-
தேவையானவை:-
கருவேப்பிலை – 1 கட்டு
சாதம் – 4 கப்
உளுந்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் – 4
பெருங்காயம் – ½ இன்ச் துண்டு
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்

ஆடிமாத நிவேதனங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.GHEER & CHILLED RECIPES

1.பாதாம் கீர்.
தேவையானவை :-
பாதாம் பருப்பு - ஒரு கப்
முந்திரிப் பருப்பு - 4
பால் – 1  லி
சீனி – ½  கப்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
மில்க் மெய்ட் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :-
நன்கு சூடான தண்ணீரில் பாதாம் பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து தோலுரித்து வைக்கவும். ஜூஸரில் பாதாம்பருப்பையும் முந்திரிப்பருப்பையும்  போட்டு ஒரு கப் பால் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
அரைத்தவற்றை ஒரு காப்பர் பாட்டம் உள்ள சில்வர் பாத்திரத்தில் போட்டு ஜீனியைச் சேர்க்கவும். அதில் மிச்ச பாலை ஊற்றி அடுப்பில் வைத்துக் கிளறவும். லேசாக சூடேறி வாசனை வரும் பக்குவத்தில் இறக்கி குங்குமப்பூவையும் மில்க் மெயிடையும் சேர்க்கவும்.
ஃப்ரிஜ்ஜில் வைத்துக் குளிர்வித்துப் பரிமாறவும்.

2.பழப் பாயாசம்:-

தேவையானவை :-

பழ டின் – 1 ( அல்லது)
சதுரத் துண்டுகளாக்கிய ஆப்பிள், பைன் ஆப்பிள், பச்சை,கறுப்பு திராக்ஷைகள்( விதையில்லாதது), செர்ரிப் பழம் – இந்தக் கலவை 1 கப்.
பால் – 1 லிட்டர்.
பாதாம் – 5
முந்திரி – 5
கஸ்டர்ட் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
சீனி –
½ கப்
பழ எஸென்ஸ் – 3 சொட்டு
சாரைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்.
நெய் – 1 டீஸ்பூன்.


வெள்ளி, 10 அக்டோபர், 2014

குமுதம் பக்தி ஸ்பெஷலில் அம்மன் ப்ரசாதங்கள். .AMMAN PRASADHAM

1.   கும்மாயம்/ஆடிக்கூழ்:-
தேவையானவை:-
கும்மாய மாவு( பச்சரிசி 1 கப்., பாசிப்பருப்பு 1 கப்., வெள்ளை உளுந்து 1 கப்பை வெறும் வாணலியில் வெதுப்பி பொடித்து சலிக்கவும்.) இதிலிருந்து ஒரு கப் மட்டும் எடுத்துக் கொள்ளவும். - 1கப் 200 கி்ராம்.
கருப்பட்டி + வெல்லம் = 1 1/2 கப் 200 கிராம்
நெய்+நல்லெண்ணெய் = 100+50 கிராம்.
தண்ணீர் - 4 கப்

செய்முறை:-
பானில் நல்லெண்ணெய் 50 கிராம்., நெய் 50 கிராம் ஊற்றி மாவை ஒரு நிமிடம் வாசனை வரும்வரை வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி வெல்லம்., கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைக்கவும். கரைந்தவுடன் வடிகட்டி மாவில் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைக்கவும். பின் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். கையில் ஒட்டாமல் கெட்டியாக கண்ணாடியைப் போல வரும்வரை கிளறி மிச்ச நெய்யைஊற்றி இறக்கவும். சுடச் சுட பரிமாறவும்.

2.   கம்மங்கூழ் :-
தேவையானவை :-
கம்பு – 2 கப்
தண்ணீர் – 6 கப்

வியாழன், 9 அக்டோபர், 2014

ஆனித் திருமஞ்சனம் நிவேதனங்கள். AANITH THIRUMANCHANAM RECIPES

சிவப்பரிசிப் பணியாரம்.

தேவையானவை :-

சிவப்பரிசி  - 2 ஆழாக்கு தலை தட்டி
உளுந்து அதன் மேல் கோபுரமாக வைக்கவேண்டும்.
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

சிவப்பரிசி , உளுந்தைக் கழுவி ஒன்றாக ஊறவைத்து 2 மணிநேரம் கழித்து உப்பு சேர்த்து அரைக்கவும். அரை டீஸ்பூன் சீனி சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு அடித்து எண்ணெயைக் காயவைத்துப் பணியாரங்களாக ஊற்றி எடுத்து மிளகாய்த் துவையலோடு பரிமாறவும்.

2. பிசினரிசிப் புட்டு:-

இனிப்புப் புட்டு :-

தேவையானவை:-

பச்சரிசி – 2 ஆழாக்கு
பாசிப்பருப்பு – ¼ ஆழாக்கு.
பிசினரிசி ( ஜவ்வரிசி ) – ¼ ஆழாக்கு
தேங்காய்த் துருவல் –  1 மூடி
ஜீனி – ¼ ஆழாக்கு
ஏலப்பொடி – 1 சிட்டிகை
நெய் – விரும்பினால் 2 டீஸ்பூன்.

செய்முறை :-
பச்சரிசியை ஊறவைத்து வடிகட்டி மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். பிசினரிசியைக கழுவி லேசான தண்ணீரோடு வைக்கவும். பாசிப்பருப்பைப் பதமாக வேக வைக்கவும்.

வைகாசி விசாகம் ஸ்பெஷல் நிவேதனம். VAIKASI VISAKAM RECIPES

ஜூன் 1 - 15 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் இந்த நிவேதனங்கள் வெளிவந்துள்ளன.

வேங்கரிசி மாவு பற்றி வாசகர் கடிதம். !!!!!!!! நன்றி கவிதா நெல்வாய்.


1. தினை அரிசி மாவுருண்டை:-

தேவையானவை :-
தினை அரிசி – 2 ஆழாக்கு
வெல்லம் – 1 கப்
தேன் - அரை கப்
        நெய் - அரை கப்
        ஏலப்பொடி - 1 சிட்டிகை.

செய்முறை:-
தினை அரிசியைச் சுத்தம் செய்து வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்தெடுத்து ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். (இன்னொரு விதத்தில் ஊறவைத்து வடிகட்டி இடித்துச் )சலித்து அதோடு நெய்யைக் காய்ச்சி ஊற்றி வெல்லத்தைத் தூள் செய்து தேன், ஏலக்காய் கலந்து பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொடுக்கவும்.

2. கம்பு பொரியரிசி மாவு :-

தேவையானவை:-
கம்பு - 2 ஆழாக்கு
நாட்டுச் சர்க்கரை - 1/3ஆழாக்கு அல்லது
ஜீனி - 1/3 கப்.


செவ்வாய், 7 அக்டோபர், 2014

சாலட்ஸ். குமுதம் பக்தி ஸ்பெஷலில். SALADS

1. ஃப்ரூட்& நட்ஸ் சாலட் :-
தேவையானவை :-
வாழைப்பழம் - 1
ஆப்பிள் - 1
மாம்பழம் - அரைபாகம்
பலாச்சுளை - 2
பைனாப்பிள் - 1 ஸ்லைஸ்
ஆரஞ்சு - 1
சாத்துக்குடி - 1
கறுப்பு திராக்ஷை - 10
பச்சை திராக்ஷை - 10
பேரீச்சம்பழம் - 2
கிஸ்மிஸ் பழம் - 20
வறுத்த முந்திரி - 10
பாதாம் - 5
பிஸ்தா - 10
சாரைப்பருப்பு - 1 டீஸ்பூன்
செம்மாதுளை முத்துக்கள் - 1 டேபிள் ஸ்பூன்

பால் - 1 லிட்டர்
கஸ்டர்ட் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
சீனி -  2 டேபிள் ஸ்பூன்
பழ எசன்ஸ் - தேவைப்பட்டால் - 3 சொட்டு.
ஐஸ்க்ரீம் - 2 ஸ்கூப் ( வனிலா/பட்டர்ஸ்காட்ச்)
செர்ரி - 10 அலங்கரிக்க 
( ஃப்ருட் டின் + மில்க் மெயிட் ) - கிடைத்தால் இவைகளிலும் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை :-
பாலைக்காய்ச்சவும். அதில் ஒரு கப் எடுத்து ஆறவைத்து கஸ்டர்ட் பவுடரைக் கலந்து திரும்ப கொதிக்கும் பாலில் ஊற்றிக் கிண்டவும். ஜீனியும் சேர்த்துக் கரைந்து திக்காகிக் கொதிக்கும்போது இறக்கி வைத்து ஆறவிடவும்.

கலவை 1 :- பேரீச்சம்பழங்களைப் பொடியாக நறுக்கவும். முந்திரியை நான்காக ஒடிக்கவும். பாதாம் பருப்புக்களை வெந்நீரில் ஊறவைத்துத் தோல் உரித்து சீய்த்துக் கொள்ளவும். பிஸ்தாக்களின் தோலை உரித்துக் கொள்ளவும். பேரீச்சை, கிஸ்மிஸ், பிஸ்தா , பாதாம், முந்திரி, சாரைப்பருப்பு, செம்மாதுளை முத்துக்கள்  இவைகளைக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

திங்கள், 6 அக்டோபர், 2014

சித்திரையில் சில்லென்று சில ஜூஸ்கள் . JUICES & MILK SHAKES

இந்த நிவேதனங்கள்  மே 1 - 15 , 2014, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.
1. க்ரேப்ஸ் ஆரஞ்ச் மில்க் ஷேக்.

தேவையானவை :-
திராக்ஷைச் சாறு  - 2 டீஸ்பூன் = ஒரு கைப்பிடி பழத்தை அரைத்து வடிகட்டவும்
ஆரஞ்சுச் சாறு  - 1/3 கப் ( இரண்டு பழங்களைப் பிழியவும்.

பால் பவுடர் - 4 டீஸ்பூன்
பொடித்த ஜீனி - 4 டீஸ்பூன்

செய்முறை:-
இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு  அரை  கப் தண்ணீர் அல்லது கால் கப் தண்ணீரும் 4 ஐஸ்துண்டங்களும் போட்டு நன்கு அடித்து கண்ணாடி டம்ளர்களில்  ஊற்றிக் கொடுக்கவும்.

2. மாங்கோ மில்க் ஷேக் :-

தேவையானவை :-
மாம்பழச் சாறு  - 1 கப் ( இரண்டு மாம்பழங்களில் இருந்து சாறு எடுத்து வடிகட்டவும்.)
பால் - 1 கப் ( கெட்டியாகக் காய்ச்சி ஆறவைத்தது )
ஜீனி - 4 டீஸ்பூன்.
அலங்கரிக்க சில துண்டு மாம்பழங்கள்.+ மாம்பழ ஐஸ்க்ரீம் ஒரு ஸ்கூப்.

செய்முறை :-
அனைத்தையும் மிக்ஸியில் போட்டு இரண்டு ஐஸ்துண்டங்கள் போட்டு அடித்து கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மாம்பழத் துண்டுகள் + ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு பரிமாறவும்.

3. ஆப்பிள் மில்க் ஷேக் :-

தேவையானவை :-
ஆப்பிள் துண்டுகள் - 2 கப் ( தோல் விதை எடுத்தது ).
பால் - 2 கப்
ஜீனி - 4 ஸ்பூன்
வனிலா எசென்ஸ் - சில துளிகள்

 செய்முறை :-
ஆப்பிள் , பால் , ஜீனி மூன்றையும் ஐஸ்துண்டங்களோடு சேர்த்து அடித்து எசன்ஸ் கலந்து கண்ணாடிக் குவளைகளில் ஊற்றிக் கொடுக்கவும்.

4. சப்போட்டா மில்க் ஷேக்

தேவையானவை :-
சப்போட்டா - 4 பழம் ( விதை தோல் எடுத்தது )
பால் - 2 கப்
ஜீனி - 4 ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம்  - 1 டீஸ்பூன்

செய்முறை :-
மூன்றையும் மிக்ஸியில் போட்டு ஐஸ்துண்டங்களோடு அடித்து ஃப்ரெஷ் க்ரீமும் போட்டு அடித்து குவளைகளில் ஊற்றி  கொடுக்கவும்.

5. பனானா மில்க் ஷேக் :-

தேவையானவை :-
வாழைப்பழம் - 2
பால் - 4 கப்
ஜீனி - 4 ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - 1 டீஸ்பூன்
வனிலா எசன்ஸ் - சில துளிகள்.

செய்முறை :-
அனைத்தையும் மிக்ஸியில் போட்டு இரண்டு ஐஸ் துண்டங்களும் போட்டு அடித்துக் குவளைகளில் ஊற்றிக் கொடுக்கவும்.

6. பைனாப்பிள் மில்க் ஷேக்:-

தேவையானவை :-
பைனாப்பிள் - 2 கப் ( தோல் முள் நீக்கியது )
பால் - 1/2 கப்
தயிர் - 1 டீஸ்பூன்
ஜீனி - 4 டீஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - 1 ஸ்பூன்.
யெல்லோ ஃபுட் கலர் - 1 சிட்டிகை.
அலங்கரிக்க - பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் , டூட்டி ஃப்ரூட்டி துண்டுகள். - 2 டீஸ்பூன்.

செய்முறை :-
அனைத்தையு மிக்ஸியில் 4 ஐஸ்துண்டங்களோடு போட்டு அடித்து பைனாப்பிள், டூட்டி ஃப்ரூட்டி துண்டுகள் போட்டுக் கொடுக்கவும்.

7. ரோஸ் மில்க் :-

தேவையானவை :-
பால் - 1/2 லிட்டர்
ஜீனி - 6 ஸ்பூன்
ரோஸ் கலர் - 1 சிட்டிகை
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்
ஃப்ரெஷ் க்ரீம் - 1 டீஸ்பூன்.

செய்முறை :-
காய்ச்சி ஆறிய பாலில் ஜீனி ரோஸ் கலர், ரோஸ் எசன்ஸ், ஃப்ரெஷ் க்ரீம் போட்டு 4 ஐஸ்துண்டங்கள் போட்டு மிக்ஸியில் நன்கு அடித்துக்கொடுக்கவும்.


1.. வெள்ளரிக்காய் , வாழைத்தண்டு ஜூஸ் :-

தேவையானவை :-
வெள்ளரிக்காய் - 1 ( தோலுரித்து துண்டுகளாக்கவும். )
வாழைத்தண்டு - 1 துண்டு.
உப்பு - 1 /3 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 சிட்டிகை.
கொத்துமல்லி - சில இலைகள்.

செய்முறை :-
வெள்ளரிக்காய் வாழைத்தண்டை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் அடித்து வடிகட்டி உப்பு. மிளகுத்தூள், கொத்துமல்லி இலைகள் சேர்த்து அருந்தவும்.

2. காரட் ஆரஞ்ச் ஜூஸ்.

தேவையானவை :-
காரட் - 1
ஆரஞ்ச் - 2
ஜீனி - 2 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - 4
தண்ணீர் - 2 கப்

செய்முறை:-

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

அட்சய திரிதியை சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் நிவேதனம். ATCHAYA THRITHIYAI, CHITHRA PAURNAMI RECIPES

ஏப்ரல் 15 - 31, 2014, குமுதம் பக்தி ஸ்பெஷலில் இந்த சமையல் குறிப்புகள் வெளியாகி உள்ளன.

1. கல்கண்டு பால் சாதம்.
தேவையானவை :-
பச்சரிசி - 1 ஆழாக்கு.
பால் - 1 லிட்டர்
உப்பு - 1 சிட்டிகை
கல்கண்டு  -100 கிராம்

செய்முறை:-
பாலைக் காய்ச்சவும். பொங்கி வரும்போது பச்சரிசியைக் களைந்து சேர்க்கவும். கொதி வந்ததும் சிம்மில் வைத்து சாதம் குழையும் வரை வேக விடவும். துடுப்பால் ( மரக் குச்சி ) தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்கவும். குழைந்த சாதத்தில் ஒரு சிட்டிகை உப்பையும் பொடித்த கல்கண்டையும் போட்டு இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கி ஆறவிடவும். நிவேதனம் செய்யவும். இது அட்சய திரிதியை ஸ்பெஷல்

2. டயர் முறுக்கு :-
பச்சரிசி - 4 ஆழாக்கு
வெள்ளை உருண்டை உளுந்து - 1 1/2 ஆழாக்கு
உப்பு - 10 மிலி
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

திங்கள், 29 செப்டம்பர், 2014

RICE GHEER, அரிசிப் பாயாசம்,

RICE GHEER, அரிசிப் பாயாசம்,

RICE GHEER :-

NEEDED:-
RICE - 50 KI
MILK - 1 L
SUGAR - 2 TBLSPN
MILK MAID - 1 TBLSPN
FRIED CASHEW, KISMIS - 4 NOS. OPTIONAL
CARDAMOM POWDER - 1 PINCH.

METHOD :-

POWDER THE RICE AND PRESSURE COOK WITH MILK. ADD SUGAR AND KEEP IT IN STOVE TILL IT DISSOLVES. ADD MILK MAID AND REMOVE FROM FIRE. SPRINKLE FRIED CASHEWS, KISMIS AND CARDAMOM POWDER. SERVE HOT OR COOL. 


அரிசிப் பாயாசம். :-

தேவையானவை :-
அரிசி - 50 கி
பால் - 1 லி
சீனி - 2 டேபிள் ஸ்பூன்
மில்க் மெயிட் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி திராக்ஷை - சிறிது நெய்யில் வறுத்தது
ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை :-

அரிசியை அரைத்து குக்கரில் பால் ஊற்றி ஒரு சவுண்ட் வேகப்போடவும். எடுத்து நன்கு மசித்து சீனி சேர்த்துக் கொதிக்க விடவும். மில்க்மெயிடைச் சேர்த்து இறக்கி முந்திரி திராக்ஷை போட்டு ஏலப்பொடி தூவவும்.

TIRE MURUKKU . டயர் முறுக்கு.

TIRE MURUKKU:-

NEEDED  :-
RAW RICE - 4 CUPS
WHITE ORID DHAL - 1 1/2 CUPS
SALT - 10 GMS
OIL - FOR FRYING

METHOD:-
WASH AND DRY THE RAW RICE IN A MUSLIN CLOTH. FRY ORID DHAL IN A PAN WITHOUT OIL FOR 2 MINUTES. MIX THE TWO AND GROND WELL IN A MACHINE . SIEVE WELL. DISSOLVE SALT IN A CUP OF WATER AND POUR THIS IN THE FLOUR. MIX WELL ENOUGH WATER AND MAKE A TOUGH DOUGH. POUR A LADDLE OF HOT OIL AND MIX THE DOUGH WELL.PUT THE DOUGH IN TIRE MURUKKU ACHU AND PRESS IT ABOVE THE HOT OIL IN TAWA. FRY TILL THE OIL STOPS BUZZING AND REMOVE FROM HEAT & SERVE HOT.

டயர் முறுக்கு :-

தேவையானவை:-
பச்சரிசி - 4 ஆழாக்கு
வெள்ளை உருண்டை உளுந்து - 1 1/2 ஆழாக்கு
உப்பு - 10 கி
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை :-
பச்சரிசியைக் களைந்து நிழற்காய்ச்சலாகக் காயப் போடவும். வெள்ளை உருண்டை உளுந்தை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வெதுப்பவும். இரண்டையும் மிஷினில் கொடுத்து அரைத்து சலித்துக் கொள்ளவும். தண்ணீரில் உப்பைக் கரைத்துச் சேர்த்து மாவு பிசையவும். எண்ணெயைக் காய வைத்து அதிலிருந்து ஒரு கரண்டி ஊற்றி நன்கு மாவை மென்மையாகப் பிசையவும். டயர் முறுக்கு அச்சைக் குழலில் வைத்து மாவை நிரப்பிப் பிழிந்து எண்ணெயில் வெண்ணிறமாக சுட்டு எடுக்கவும். பக்குவம் சரியாக இருந்தால் வெண்மையாக வரும்

HOME MADE GULAB JAMOON, குலோப் ஜாமூன்

GULAB JAMOON, குலோப் ஜாமூன்:-

NEEDED:-
MILK POWDER - 200 GMS
MAIDA - 2 TBLSPN
CURD - 2 TBLSPB
GHEE - 1 TSP
SUGAR - 2 CUPS
WATER - 2 CUPS
SODA BI CARBONATE - A PINCH
OIL - FOR FRYING

METHOD:-

MAKE A SOFT DOUGH WITH MILK POWDER, MAIDA, CURD, GHEE AND SODA BI CARBONATE. FORM INTO SMALL BALLS. FRY OVER LOW HEAT TILL GOLDEN BROWN. 

MIX SUGAR AND WATER . LET IT BOIL TILL IT IS OF ONE THREAD CONSISTENCY. KEEP IT WARM.  ADD THE JAMOONS AND MARINATE THEM FOR 15 MINUTES AND SERVE HOT.

குலோப் ஜாமூன்:-

தேவையானவை:-
பால் பவுடர் - 200 கி
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
சீனி - 2 கப்
தண்ணீர் - 2 கப்
சோடா பை கார்பனேட் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
பால் பவுடர், மைதா, தயிர் நெய் சேர்த்து  மென்மையாகப் பிசைந்து உருட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும்.

ஜீனியையும் தண்ணீரையும் சேர்த்து பாகு காய்ச்சவும். 2 நிமிடங்கள் நன்கு கொதித்ததும் இறக்கவும். வெதுவெதுப்பான பாகில் ஜாமூன்களைச் சேர்த்து 15 நிமிடம் ஊறவைத்துப் பரிமாறவும்.

சனி, 27 செப்டம்பர், 2014

BITTERGOURD COWPEAS PITLAI. பாகற்காய் தட்டைப்பயறு பிட்ளை.

BITTERGOURD COWPEAS PITLAI:-

NEEDED :-
BITTERGOURD - 250 GMS
COW PEAS - 50 GMS
THUVAR DHAL - 1 TBLSPN .
SMALL ONION - 8 NOS
TOMATO - 1 NO.
RED CHILLIES - 6 NOS
CORIANDER - 1 TBLSPN
ORID DHAL - 1 TSP
CHANNA DHAL - 1 TSP
JEERA - 1/4 TSP
FENUGREEK - 1/4 TSP
PEPPER - 10
GRATED COCONUT -  1 TBLSPN
TUMERIC - 1 PINCH
TAMARIND - 1 LEMON SIZE BALL.
SALT - 1 TSP
OIL - 1 TBLSPN
MUSTARD -  1/2 TSP
ORID DHAL - 1/2 TSP
JEERA - 1/4 TSP
ASAFOETIDA - 1 PINCH
CURRY LEAVES.- 1 ARK

METHOD :-

WASH, CLEAN AND REMOVE THE SEEDS AND SLICE THE BITTERGOURD. PEEL AND CUT THE SMALL ONION AND TOMATO. WASH AND PRESSURE COOK THUVAR DHAL AND COWPEAS WITH ENOUH WATER.

IMMERSE THE TAMARIND IN 2 CUPS OF WATER AND SQUEEZE TO TAKE THE PULP. ADD SALT AND KEEP ASIDE.

SAUTE THE BITTERGOURD IN LITTLE OIL AND POUR SOME WATER AND COOK FOR SOMETIME. KEEP ASIDE.

IN 1 TSP OIL SAUTE THE RED CHILLIES, CORIANDER, ORID DHAL, CHANNA DHAL,JEERA, FENUGREEK, PEPPER AND LASTLY ADD THE GRATED COCONUT AND SAUTE FOR SOMETIME. GRIND WELL WITH ENOUGH WATER.

HEAT OIL IN A PAN ADD THE MUSTARD. AND WHEN IT SPLUTTERS ADD ASAFOETIDA, ORID DHAL, JEERA, CURRY LEAVES, SMALL ONIONS, TOMATO, SAUTE WELL. ADD THE PARA COOKED BITTERGOURD WITH THUVAR DHAL AND COWPEAS. MIX WELL.

ADD THE TAMARIND PULP AND THE GROUND MASALA. MIX WELL ALLOW IT TO BOIL FOR 5 MINUTES. REMOVE FROM HEAT AND SERVE HOT WITH RICE AND PAPAD.


பாகற்காய் தட்டைப்பயிறு பிட்ளை:-

தேவையானவை. :-
பாகற்காய்  - 250 கி
தட்டைப்பயறு / காராமணி - 50 கி
துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 1
வரமிளகாய் - 6
வர மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 14 டீஸ்பூன்
மிளகு - 10
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கருவேப்பிலை - 1 இணுக்கு.


பாகற்காய்களைக் கழுவி விதை நீக்கி வட்ட வட்டமாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து நறுக்கவும். தக்காளியையும் துண்டுகளாக்கவும்.ப்ரஷர் பானில் துவரம் பருப்பையும், தட்டைப் பயறையும் கழுவிப் போட்டு போதிய நீர் ஊற்றி வேக விடவும்.

புளியை 2 கப் தண்ணீரில் ஊறப்போட்டு சாறு எடுத்து உப்பு சேர்த்து வைக்கவும்.

பாகற்காயை சிறிது எண்ணெயில் வதக்கி  தண்ணீர் சிறிது சேர்த்து வேக வைத்து இறக்கவும்.

ஒரு டீஸ்பூன் எண்ணெயில் மிளகாய், மல்லி , உளுந்தம்பருப்பு , கடலைப்பருப்பு, சீரகம் வெந்தயம் மிளகு வறுத்து துருவிய தேங்காயையும் போட்டு வறுத்து ஆறியவுடன் லேசாகத் தண்ணீர் ஊற்றி அரைத்து வைக்கவும்.

ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் சீரகம் பெருங்காயம் கருவேப்பிலை போட்டு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பதமாய் வேக வைத்த  பாகற்காய், வேகவைத்த  துவரம் பருப்பு, தட்டைப் பயறைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும்

புளித்தண்ணீரையும் அரைத்த மசாலாவையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இறக்கி சூடான சாதம் அப்பளத்தோடு பரிமாறவும்.