சன்னா பகோடா
:-
தேவையானவை:-
வெள்ளைக் கொண்டைக் கடலை – 1 கப், சீரகம் – அரை டீஸ்பூன், இஞ்சி – 1 இன்ச் துண்டு, பச்சை
மிளகாய் – 1, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, கொத்துமல்லித்தழை
– சிறிது, உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:-
வெள்ளைக் கொண்டைக் கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் நீரை வடித்து சீரகம் இஞ்சி
பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். இதில் மிளகாய்த்தூள்,
பெருங்காயத்தூள், பொடியாக அரிந்த கொத்துமல்லித்தழைபோட்டுப் பிசைந்து எண்ணெயைக்காயவைத்து
பகோடாக்களாகப் பொரித்து எடுத்து நிவேதிக்கவும்.