கடலைப்பருப்பு
கோஸம்பரி :-
தேவையானவை:-
கடலைப்பருப்பு – 1 கப், பொடியாக அரிந்த வெள்ளரிக்காய்- 1 கப், தேங்காய்த்துருவல் –
அரை கப், பச்சை மிளகாய் – 2, எலுமிச்சை – அரை மூடி, கொத்துமல்லி கருவேப்பிலை – 1 கைப்பிடி,
உப்பு – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய் – அரை டீஸ்பூன்.
செய்முறை:-
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். இதில் பொடியாக அரிந்த வெள்ளரி,
தேங்காய்த்துருவல், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, எலுமிச்சைச்
சாறு, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெயில் கடுகைத் தாளித்துக் கொட்டவும்.
இதெல்லாம் கனவில் தான்...!
பதிலளிநீக்குஅஹா இது செய்வது எளிது டிடி சகோ. நீங்களே செய்யலாம். அவ்ளோ ஈஸி.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!