வியாழன், 4 ஆகஸ்ட், 2022

முள்ளங்கிக் கீரை துவட்டல்

முள்ளங்கிக் கீரை துவட்டல்


 

தேவையானவை:- முள்ளங்கிக்கீரை - 1 கட்டு,  தண்டு நீக்கிப் பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயம்- 10, வரமிளகாய் – 1, கடுகு - 1 டீஸ்பூன்உளுந்து - 2 டீஸ்பூன்உப்பு - 1/2 டீஸ்பூன்எண்ணெய் - 2 டீஸ்பூன். ஊறவைத்த பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், துருவிய தேங்காய் - 1  டேபிள் ஸ்பூன்

 

செய்முறை :- பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு ,உளுந்து போடவும்அதன் பின் ரெண்டாகக் கிள்ளிய மிளகாய்., பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் போடவும்ஒரு நிமிடம் வதக்கிய பின் முள்ளங்கிக் கீரையை சேர்க்கவும்கீரையை நன்கு வதக்கியபின், வெந்த பாசிப்பருப்புச் சேர்க்கவும்கால் கப் தண்ணீர் ஊற்றி  5 நிமிடங்கள் மூடி போட்டு வேகவைத்து உப்பு, தேங்காய் சேர்த்து இறக்கவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு