புதன், 11 அக்டோபர், 2023

தவலை வடை

தவலை வடை



தேவையானவை:- பச்சரிசி - 50 கிராம்புழுங்கரிசி - 50 கிராம்உளுந்து - 50 கிராம்துவரம் பருப்பு - 50 கிராம்கடலைப் பருப்பு - 50 கிராம்பாசிப்பருப்பு - 50 கிராம்ஜவ்வரிசி - 50 கிராம்வர மிளகாய் – 4, சோம்பு ( பெருஞ்சீரகம்) - 1 டீஸ்பூன்துருவிய தேங்காய் - 1 கப்பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்., உப்பு - 1 1/2 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- அரிசி பருப்புக்களை நன்கு கழுவி ஊறவைக்கவும்மிளகாய் , சோம்புஉப்பை பொடியாக்கவும்அத்துடன் அரிசி பருப்பு ஜவ்வரிசி சேர்த்து அரைக்கவும்ஒரு பானில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து அதில் வெங்காயத்தை நன்கு வதக்கவும்அதில் துருவிய தேங்காயைப் போட்டுப் பிரட்டி அரைத்த மாவில் கொட்டி நன்கு கலக்கவும்எண்ணெயைக் காயவைத்து ஒரு சின்ன குழிவான கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும்இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து தேங்காய்ச் சட்னி அல்லது கதம்பச் சட்னியுடன் சுடச் சுடப் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக