சனி, 3 பிப்ரவரி, 2024

13. ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

13. ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

தேவையானவை:-மைதா – 1 கப் + 1 டேபிள் ஸ்பூன், கோகோ பவுடர் – அரைகப், பேகிங் பவுடர் – 2 டீஸ்பூன், முட்டை – 6 , சீனி – 1 கப், உப்பு – அரை டீஸ்பூன், வனிலா எஸன்ஸ் – 1 டீஸ்பூன், சிரப் செய்ய :- சீனி – அரை கப், தண்ணீர் – அரை கப், செர்ரிப் பழங்கள் – 1 டப்பா, சீனி – கால் கப், கார்ன் ஸ்டார்ச் – 1/3 கப், ஹெவி க்ரீம் – 2 1/2 கப், பொடித்த சீனி – அரை கப்,

செய்முறை:- ஒரு பௌலில் மைதா ஒரு கப், கோகோ பவுடர், பேக்கிங் பவுடர் போட்டு நன்கு கலக்கவும். இன்னொரு பௌலில் ஆறு முட்டைகளை உடைத்து ஊற்றிச் சீனியையும் உப்பையும் சேர்த்து பீட்டரால் இருமடங்காகும் வரை நன்கு அடிக்கவும். இதில் கோகோ மைதா மிக்ஸர், வனிலா எசன்ஸ், கால் கப் வெண்ணெயை உருகவைத்து ஊற்றி நன்கு கலக்கவும். ஒரு 9 இஞ்ச் கேக் ட்ரேயில் கோகோ பவுடரைத் தூவி டஸ்ட் செய்யவும். அதில் கேக் கலவையை ஊற்றவும். 350 டிகிரி முற்சூடு செய்த அவனில் 180 டிகிரி செண்டிகிரேடில் 30 – 35 நிமிடம் பேக் செய்யவும். வெளியே எடுத்துக் குளிர விடவும். அரைக் கப் தண்ணீர், சீனி சேர்த்து சிரப் செய்யவும். செர்ரிப் பழங்களை வடிகட்டி அந்த ஜூஸை சாஸ்பேனில் ஊற்றி கால் கப் சீனி, கார்ன் ஸ்டார்ச் சேர்த்துக் கெட்டியாகும் வரை காய்ச்சி செர்ரிப் பழங்களை சேர்க்கவும். ஹெவி க்ரீமில் பொடித்த சீனி சேர்த்துக் கூம்பாக எழும்பும்வரை அடித்து பைபிங் பேக்கில் போடவும். கேக் கட்டரால் நான்கு சம துண்டுகளாக படுக்கை வசத்தில் வெட்டவும். இதில் ஒவ்வொரு லேயரிலும் சிரப் தடவி நடுவில் செர்ரி கலவை வைத்துச் சுற்றிலும் க்ரீம் கலவையை பைபிங் செய்யவும். இதேபோல் நான்கு லேயர்களையும் அடுக்கி மேலே ஹெவி க்ரீம் தடவி, டார்க் சாக்லேட்டைச் சீய்த்துத் தூவி க்ரீம் பூக்கள் பைபிங் செய்து செர்ரியால் அலங்கரிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக