16.மேங்கோ பன்னா
தேவையானவை:- மாங்காய் – 2, ஜீனி – மாங்காயின் சதைப்பகுதி அளவில் இரண்டு மடங்கு, ஏலப்பொடி – கால் டீஸ்பூன் , வறுத்த சீரகப் பொடி – அரை டீஸ்பூன், மிளகுப்பொடி – கால் சிட்டிகை, கறுப்பு உப்பு அல்லது சாதாரண உப்பு – 2 டீஸ்பூன்.
செய்முறை:- மாங்காய்களைக் கழுவி ஒரு பிரஷர் குக்கரில் இரண்டு கப் நீரூற்றி முழுதாக வேகவிடவும். வெந்தநீரை வடித்து வைத்துக் கொள்ளவும். இது ஜூஸ் தயாரிக்கும்போது உதவும். மாங்காயின் சதைப்பகுதியைத் தோலுரித்து, கொட்டை எடுத்து நன்குவழித்து எடுத்து மசிக்கவும். வழித்து எடுத்த சதைப் பகுதியைப் போல இரண்டு மடங்கு ஜீனி, ஏலப்பொடி, வறுத்த சீரகப் பொடி, மிளகுப்பொடி, கறுப்பு உப்பு சேர்த்து நன்கு கரைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கவும். ஜூஸ் தயாரிக்கும்போது இதில் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூனை ஒரு க்ளாஸில் போட்டு மாங்காய் வேகவைத்த தண்ணீரைக் கலந்து பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக