செவ்வாய், 9 ஏப்ரல், 2024

3.ரஸ்க் மீல்மேக்கர் சாசேஜ்

3.ரஸ்க் மீல்மேக்கர் சாசேஜ்



தேவையானவை:- ரஸ்க் – ஒரு பாக்கெட், மீல்மேக்கர் ( சோயா சங்க்ஸ் ) – 30, சீஸ் – 50 கிராம் துருவியது, ஓமம் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், வெங்காயத்தாள் – அரைக்கட்டு, வெண்ணெய் – 20 கிராம், முட்டை – 2. உப்பு – அரை டீஸ்பூன், மைதா – ரோல் செய்ய, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- ரஸ்கை நொறுக்கி வைக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் ரஸ்க் தூளைத் தனியாக எடுத்து வைக்கவும். மீல்மேக்கரை வெந்நீரில் 3 நிமிடம் போட்டு நன்கு அலசிப் பிழிந்தெடுத்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும். ஒரு பானில் வெண்ணெயை உருகவைத்துப் பொடியாக அரிந்த வெங்காயத்தாளைப் போட்டு வதக்கவும். பானை இறக்கி வைத்து இதில் பொடித்த ரஸ்க், மீல்மேக்கர், துருவிய சீஸ், உப்பு, ஓமம், கடுகு, பொடித்த மிளகு இவற்றுடன் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் எடுத்துச் சேர்த்து நன்கு பிசையவும். முட்டை வெண்கருவை நன்கு அடித்து வைக்கவும். மாவை நீள சாசேஜ்களாக உருட்டி முட்டை வெண்கருவில் புரட்டி மைதாவையும் ரஸ்கையும் தூவித் தனித்தனியாக ட்ரேயில் அடுக்கி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்துத் தட்டையான பானில் எண்ணெய் ஊற்றி எல்லாப் பக்கமும் மொறுமொறுவென வரும்வரை பொரித்து இறக்கி சாஸ்களுடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக