ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

2.ரஸ்க் மஷ்ரூம் கட்லெட்

2.ரஸ்க் மஷ்ரூம் கட்லெட்



தேவையானவை:- ரஸ்க் – 8 ஸ்லைஸ், காளான் – 10,  பீட்ரூட், கேரட் – தலா ஒன்று, பெரிய வெங்காயம் சின்னது – 1 பொடியாக அரியவும். இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு – தலா அரை டீஸ்பூன், சோளமாவு, மைதாமாவு – தலா இரண்டு டீஸ்பூன். வெண்ணெய் – 2 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – 1 கைப்பிடி பொடியாக அரியவும். எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- காளானைக் கொதிக்கும் வெந்நீரில் 3 நிமிடம் போட்டு வடிகட்டவும். கேரட் பீட்ரூட்டைப் பொடியாகத் துருவவும். ரஸ்கைப்பொடிக்கவும். கட்லெட்டைப் புரட்டிப் போடுவதற்குச் சிறிது ரஸ்கைத் தனியாக எடுத்து வைக்கவும்.  இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பீட்ரூட், கேரட்டைப் போட்டு நன்கு வதக்கவும். பச்சை வாடை போனபின்பு, இதில் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். அத்துடன் வெண்ணெய், ரஸ்க் தூள், சிறிது சோளமாவு, மைதாமாவு போட்டுப் பிசையவும். இதை எலுமிச்சை அளவு எடுத்து உருண்டைகளாக்கி உள்ளே காளானை வைத்து மூடி நீள்வட்டமாகத் தட்டவும். சோளமாவு, மைதாமாவில் சிறிது மிளகாய்ப்பொடி, உப்புப் போட்டுக் கரைத்து அதில் கட்லெட்களை நனைத்து ரஸ்க் தூளில் பிரட்டி தவாவில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டுப் பொரித்தெடுக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக