சனி, 16 மார்ச், 2013

ATTA, RAVA, MAIDA DOSAI. கோதுமை, ரவை, மைதா தோசை

ATTA, RAVA, MAIDA DOSAI. கோதுமை, ரவை, மைதா தோசை.


NEEDED:-

ATTA - 1 TBLSPN
WHITE RAVA - 1TBLSPN
MAIDA - 1 TBLSPN
SALT - 1/3 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH
WATER - 1 TUMBLER
OIL - 6 TSP

METHOD:-

ADD ALL THE INGREDIENTS, MIX WELL  WITH WATER TO MAKE A SMOOTH BATTER.( WITHOUT LUMPS).  MARINATE FOR HALF AN HOUR. HEAT OIL AND PREPARE 6 DOSAS OUT OF IT. SERVE HOT WITH TOMATO CHUTNEY.

கோதுமை ரவை மைதா தோசை.

தேவையானவை :-

கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை ரவை - 1 டேபிள் ஸ்பூன்
மைதா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
தண்ணீர் - 1 டம்ளர்
எண்ணெய் - 6 டீஸ்பூன்

செய்முறை:-

எல்லா மாவுகளையும்  உப்பு பெருங்காயத்தையும்  நன்கு கலந்து தண்ணீர் விட்டுக் கட்டிகளில்லாமல் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி திருப்பி விட்டு வேகவைத்து எடுக்கவும். தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.

PLAIN RAVA ROAST . ரவா ரோஸ்ட்

PLAIN RAVA ROAST .  ரவா ரோஸ்ட்.

NEEDED:-

DOSA FLOUR - 2TBLSPN( FERMENTED WELL)
RAVA - 1/4 CUP
JEERA - 1/4 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH
DANIA LEAVES, CURRY LEAVES - 1 TSP CHOPPED.
SALT - 1/4 TSP
WATER - 1/2 CUP
OIL - 4 TSP

METHOD:-

ADD ALL THE INGREDIENTS WITH 1/2 CUP WATER AND MARINATE FOR HALF AN HOUR. HEAT THE DOSA TAWA AND PREPARE CRISPY DOSAS. WE CAN MAKE 4 DOSAS OUT OF THIS. SERVE HOT WITH COCONUT CHUTNEY OR AVIAL.

ரவா ரோஸ்ட் :-

தேவையானவை :-

தோசை மாவு - 2 கரண்டி ( புளித்தது)
ரவை - 1/4 கப்
ஜீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி - 1 சிட்டிகை
கொத்துமல்லி, கருவேப்பிலை - 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது.
உப்பு - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - 4 டீஸ்பூன்

செய்முறை:-

எல்லாப் பொருட்களையும் அரை கப் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். அரைமணி நேரத்துக்குப் பிறகு தோசைக்கல்லைச் சூடாக்கி பொன்னிறமான தோசைகள் செய்யவும். இதிலிருந்து 4 தோசைகள் செய்ய முடியும். தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் பரிமாறவும். சாம்பார் பச்சடி, மிளகாய் துவையலும் சுவை சேர்க்கும்.

EGG DOSAI. முட்டை தோசை.

EGG DOSAI.

NEEDED:-

DOSA FLOUR - 2 TBLSPN
EGG -  2 NO
PEPPER JEERA POWDER - 1/2 TSP
SALT - 1/4 TSP
OIL - 2 TSP

METHOD :-

HEAT DOSA TAWA. SPREAD THE FLOUR. OPEN THE SHELL AND POUR THE EGG . SPRAY  THE PEPPER JEERA POWDER  AND SALT AND  1 TSP OIL . COVER IT WITH A LID. AFTER ONE MINUTE REMOVE THE LID AND TURN THE DOSA AND COOK THE OTHER SIDE FOR 2 MINUTES. IF NEEDED SPRAY SOME OIL.  SERVE HOT WITH  CURRY LEAVES GRAVY. WE CAN MAKE TWO DOSAS IN THIS.

முட்டைத் தோசை.:-

தேவையானவை:-

தோசை மாவு - 2 கரண்டி
முட்டை - 2
மிளகு ஜீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-

தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும். அதில் முட்டையை உடைத்து ஊற்றி மிளகு சீரகத்தூளைத் தூவி , உப்பையும் தூவி  சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வேகவைக்கவும். மூடியைத் திறந்து இன்னொரு புறம் திருப்பி பொன்னிறமாக வேகவைத்து கருவேப்பிலைச் சட்னியுடன் பரிமாறவும். இதில் இரண்டு தோசைகள் செய்யலாம்.

PODI DOSA. பொடித் தோசை.

PODI DOSA.

NEEDED:-

DOSA FLOUR - 2 TBLSPN
IDDLY PODI - 2 TSP
OIL - 2 TSP

METHOD :-

HEAT DOSA TAWA. SPREAD THE FLOUR. SPRINKLE THE IDDLY PODI . SPRAY  1 TSP OIL . COVER IT WITH A LID. AFTER ONE MINUTE REMOVE THE LID AND TURN THE DOSA AND COOK THE OTHER SIDE FOR 2 MINUTES. IF NEEDED SPRAY SOME OIL.  SERVE HOT WITH  CURRY LEAVES CHUTNEY. WE CAN MAKE TWO DOSAS IN THIS.

பொடித் தோசை.:-

தேவையானவை:-

தோசை மாவு -  2  கரண்டி
இட்லிப் பொடி -  2 டீஸ்பூன்.
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-

தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும். அதில் பொடியைத் தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வேகவைக்கவும். மூடியைத் திறந்து இன்னொரு புறம் திருப்பி பொன்னிறமாக வேகவைத்து கருவேப்பிலைச் சட்னியுடன் பரிமாறவும். இதில் இரண்டு தோசைகள் செய்யலாம்.

ONION DOSA. வெங்காய தோசை.

ONION DOSA.

NEEDED:-

DOSA FLOUR - 2 TBLSPN
BIG ONION - 1 NO CHOPPED
OIL - 2 TSP

METHOD :-

HEAT DOSA TAWA. SPREAD THE FLOUR. SPRINKLE THE CHOPPED ONION. SPRAY  1 TSP OIL . COVER IT WITH A LID. AFTER ONE MINUTE REMOVE THE LID AND TURN THE DOSA AND COOK THE OTHER SIDE FOR 2 MINUTES. IF NEEDED SPRAY SOME OIL. COOK TILL THE ONIONS BECOME GOLDEN BROWN COLOUR. SERVE HOT WITH CORIANDER COCONUT CHUTNEY. WE CAN MAKE TWO DOSAS IN THIS.

வெங்காய தோசை.:-

தேவையானவை:-

தோசை மாவு - 2 கரண்டி.
பெரிய வெங்காயம்  - 1 பொடியாக நறுக்கியது.
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-

தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும். அதில் வெங்காயத்தைத் தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வேகவைக்கவும். மூடியைத் திறந்து இன்னொரு புறம் திருப்பி பொன்னிறமாக வேகவைத்து கொத்துமல்லி தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். இதில் இரண்டு தோசைகள் செய்யலாம்.