செவ்வாய், 17 டிசம்பர், 2019

வெங்காயம் தக்காளி உருளை திறக்கல்.

வெங்காயம் தக்காளி உருளை திறக்கல்.

தேவையானவை :- வெங்காயம் - 1, தக்காளி - 2, அவித்த உருளைக்கிழங்கு சின்னம் - 1, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

செய்முறை :- வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். இதில் உப்பு, மிளகாய்ப் பொடி போட்டு, அவித்த உருளைக்கிழங்கைத் தோலுரித்து லேசாக பிசைந்து போடவும். அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் சிம்மில் வைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். இது இட்லி தோசை, பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

2 கருத்துகள்:

  1. செய்து பார்த்த பின்தான் பதிவு எழுத நினைத்தேன். நேற்று செய்து பார்த்தேன். சுவையோ சுவை. சூப்பர் சுவை

    பதிலளிநீக்கு
  2. ஆஹா நன்றி கௌசி :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு