வியாழன், 12 ஆகஸ்ட், 2021

16.மும்பை வெஜ் பிரியாணி

16.மும்பை வெஜ் பிரியாணி


 

தேவையானவை :- 


சாதம் செய்ய :- பாஸ்மதி அரிசி - 1 கப்ஏலக்காய் -2, கிராம்பு - 4, பட்டை - 1,  பிரிஞ்சி இலை - 1, மிளகு - 1 டீஸ்பூன்எண்ணெய் - 2 டீஸ்பூன்உப்பு - 1 டீஸ்பூன்பச்சை மிளகாய் - 1.

பிரியாணி செய்ய :- பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, உருளைகாரட் - தலா 1, காலிஃப்ளவர் - 7 பூபீன்ஸ் - 4,  குடைமிளகாய் - பாதிபட்டாணி - 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்யோகர்ட் - முக்கால் கப்எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்பட்டைபிரிஞ்சி இலைஜாதி பத்திரிஅன்னாசிப்பூகறுப்பு ஏலக்காய் - தலா - 1, கிராம்பு - 2, ஏலக்காய் - 3,  சோம்புசீரகம் - அரை டீஸ்பூன் தலாமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்உப்பு - அரை டீஸ்பூன்காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்சீரகப் பொடிகரம் மசாலாமல்லித்தூள் தலா அரை டீஸ்பூன்ப்ரூன்ஸ் - - 4 ( காய்ந்த ப்ளம் ).


லேயரிங் செய்ய :- வறுத்த வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்புதினாகொத்துமல்லி - தலா 1 டேபிள் ஸ்பூன்கேசரித்தூள் - 1 சிட்டிகைநெய் - 1 டீஸ்பூன்.

 

செய்முறை:- ஒரு பெரிய பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்அதில் ஏலக்காய்கிராம்புபட்டைபிரிஞ்சி இலைமிளகுஎண்ணெய்உப்புபச்சை மிளகாய் சேர்த்துக் கொதிக்க விடவும்இதில் 20 நிமிடம் ஊறவைத்த பாசுமதி அரிசியைச் சேர்த்து அரைவேக்காடாய் வடித்து வைக்கவும்ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய்நெய் இரண்டையும் ஊற்றி சூடுபடுத்தி பட்டைபிரிஞ்சி இலைஜாதி பத்திரிஅன்னாசிப்பூகறுப்பு ஏலக்காய்கிராம்புஏலக்காய்சோம்புசீரகம் போட்டுத் தாளிக்கவும்இதில் நீளமாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்ப்ரவுனாக வதங்கியதும் தக்காளி சேர்த்துக் குழைய வதக்கவும்இதில் நீளமாக வெட்டிய காரட்டையும் உருளையையும் போட்டு உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவுடவும்பின் மஞ்சள்தூள்மிளகாய்த்தூள்மல்லித்தூள்கரம் மசாலாசீரகத்தூள் சேர்த்துக் காய்ந்த ப்ளம்ஸையும் சேர்க்கவும்யோகர்ட்டையும் சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் காலிஃப்ளவர்பீன்ஸ்குடைமிளகாய்பட்டாணி சேர்த்து நன்கு கலக்கிவிட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடிபோட்டு வேகவிடவும்பாதி வெந்ததும் இறக்கி வைத்து இன்னொரு கனமான பாத்திரத்தில் வெந்த சாதம்காய்புதினா மல்லித்தழைபொரித்த வெங்காயம்என லேயர் லேயராக அடுக்கவும்இதன்மேல் மிச்ச காய்கறி க்ரேவியை ஊற்றி நெய் தெளித்து மைதாபேஸ்டால் மூடியை ஒட்டி பத்து நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும்உருளை வேஃபர்ஸ்ஸ்டூவுடன் பரிமாறவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு