ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

17.வாத்து பிரியாணி

17.வாத்து பிரியாணி


தேவையானவை :- வாத்துக்கறி - அரை கிலோபாசுமதி அரிசி -  2 கப்வெங்காயம் - 2, தக்காளி - 2, யோகர்ட் - அரை கப்தேங்காய்ப்பால் - 2 கப்புதினா கொத்துமல்லி - தலா அரைக்கட்டுமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்மஞ்சள்தூள் - 1டீஸ்பூன்முந்திரி - 10, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்பிரிஞ்சி இலை - 2, எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்பச்சை மிளகாய் - 4, இஞ்சி பூண்டு விழுது - 4 டீஸ்பூன்பட்டைகிராம்புஏலக்காய் - தலா 2.

 

செய்முறை:- வாத்துக்கறியை சுத்தம் செய்து அலசி நீரைப் பிழிந்து வைக்கவும்பாசுமதி அரிசியைக் களைந்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்பச்சைமிளகாய்இஞ்சி,, பூண்டுபட்டைகிராம்புஏலக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் மையாக அரைக்கவும்இதை வாத்துக்கறியுடன் போட்டு புதினாமஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கி 2 மணிநேரம் ஊறவைக்கவும்குக்கரில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை போட்டு வெங்காயம் தக்காளியைப் பொன்னிறமாக வறுக்கவும்இதில் வாத்துக்கறியை மசாலாவோடு போட்டுப் பிரட்டியோகர்ட்மிளகாய்த்தூள்மஞ்சள்தூள் சேர்க்கவும்குக்கரை மூடி பத்து நிமிடம் சிம்மில் வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்க்கவும்உப்பு சேர்த்துக் கொதிக்கும்போது அரிசியைப் போட்டு நன்கு கிளறி வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும்வெந்தவுடன் எலுமிச்சைச் சாறுவறுத்த முந்திரிபொடியாக அரிந்த கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்மிண்ட் சட்னிதக்காளி சாஸுடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக