17.வாத்து பிரியாணி
தேவையானவை :- வாத்துக்கறி - அரை கிலோ, பாசுமதி அரிசி - 2 கப், வெங்காயம் - 2, தக்காளி - 2, யோகர்ட் - அரை கப், தேங்காய்ப்பால் - 2 கப், புதினா கொத்துமல்லி - தலா அரைக்கட்டு, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1டீஸ்பூன், முந்திரி - 10, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை - 2, எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன். பச்சை மிளகாய் - 4, இஞ்சி பூண்டு விழுது - 4 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2.
செய்முறை:- வாத்துக்கறியை சுத்தம் செய்து அலசி நீரைப் பிழிந்து வைக்கவும். பாசுமதி அரிசியைக் களைந்து 2 மணிநேரம் ஊறவைக்கவும். பச்சைமிளகாய், இஞ்சி,, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் மையாக அரைக்கவும். இதை வாத்துக்கறியுடன் போட்டு புதினா, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கி 2 மணிநேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை போட்டு வெங்காயம் தக்காளியைப் பொன்னிறமாக வறுக்கவும். இதில் வாத்துக்கறியை மசாலாவோடு போட்டுப் பிரட்டி, யோகர்ட், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். குக்கரை மூடி பத்து நிமிடம் சிம்மில் வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கொதிக்கும்போது அரிசியைப் போட்டு நன்கு கிளறி வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். வெந்தவுடன் எலுமிச்சைச் சாறு, வறுத்த முந்திரி, பொடியாக அரிந்த கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும். மிண்ட் சட்னி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக