16.மும்பை வெஜ் பிரியாணி
தேவையானவை :-
சாதம் செய்ய :- பாஸ்மதி அரிசி - 1 கப், ஏலக்காய் -2, கிராம்பு - 4, பட்டை - 1, பிரிஞ்சி இலை - 1, மிளகு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1.
பிரியாணி செய்ய :- பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, உருளை, காரட் - தலா 1, காலிஃப்ளவர் - 7 பூ, பீன்ஸ் - 4, குடைமிளகாய் - பாதி, பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், யோகர்ட் - முக்கால் கப், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், பட்டை, பிரிஞ்சி இலை, ஜாதி பத்திரி, அன்னாசிப்பூ, கறுப்பு ஏலக்காய் - தலா - 1, கிராம்பு - 2, ஏலக்காய் - 3, சோம்பு, சீரகம் - அரை டீஸ்பூன் தலா, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், சீரகப் பொடி, கரம் மசாலா, மல்லித்தூள் தலா அரை டீஸ்பூன், ப்ரூன்ஸ் - - 4 ( காய்ந்த ப்ளம் ).
லேயரிங் செய்ய :- வறுத்த வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன், புதினா, கொத்துமல்லி - தலா 1 டேபிள் ஸ்பூன், கேசரித்தூள் - 1 சிட்டிகை, நெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை:- ஒரு பெரிய பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, மிளகு, எண்ணெய், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் 20 நிமிடம் ஊறவைத்த பாசுமதி அரிசியைச் சேர்த்து அரைவேக்காடாய் வடித்து வைக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி சூடுபடுத்தி பட்டை, பிரிஞ்சி இலை, ஜாதி பத்திரி, அன்னாசிப்பூ, கறுப்பு ஏலக்காய், கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம் போட்டுத் தாளிக்கவும். இதில் நீளமாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். ப்ரவுனாக வதங்கியதும் தக்காளி சேர்த்துக் குழைய வதக்கவும். இதில் நீளமாக வெட்டிய காரட்டையும் உருளையையும் போட்டு உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவுடவும். பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சீரகத்தூள் சேர்த்துக் காய்ந்த ப்ளம்ஸையும் சேர்க்கவும். யோகர்ட்டையும் சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் காலிஃப்ளவர், பீன்ஸ், குடைமிளகாய், பட்டாணி சேர்த்து நன்கு கலக்கிவிட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடிபோட்டு வேகவிடவும். பாதி வெந்ததும் இறக்கி வைத்து இன்னொரு கனமான பாத்திரத்தில் வெந்த சாதம், காய், புதினா மல்லித்தழை, பொரித்த வெங்காயம், என லேயர் லேயராக அடுக்கவும். இதன்மேல் மிச்ச காய்கறி க்ரேவியை ஊற்றி நெய் தெளித்து மைதாபேஸ்டால் மூடியை ஒட்டி பத்து நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும். உருளை வேஃபர்ஸ், ஸ்டூவுடன் பரிமாறவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!