15.இறால் பிரியாணி
தேவையானவை :- பாசுமதி அரிசி அரை கிலோ, இறால் கால் கிலோ, பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 3, இஞ்சி 2 இஞ்ச் துண்டு, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 3, கொத்துமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன், புதினா - 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், தயிர் 2 டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா - 2.
செய்முறை :- அரிசியைக் களைந்து ஊறவைக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்துமல்லியை அரைக்கவும். இறாலில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து தயிரும் போட்டு நன்கு கலந்து ஊறவைக்கவும். ப்ரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் தண்ணீர் போல வதங்கியதும் இஞ்சி பூண்டு கொத்துமல்லி விழுதைச் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்ததும் தக்காளியைப் போடவும். தக்காளி குழைந்ததும் ஊறவைத்த இறாலை மசாலோடு சேர்த்து நன்கு கிளறி கால் கப் தண்ணீர் சேர்த்து மூடியைத் திருப்பி மூடி வேகவிடவும். பத்து நிமிடம் வெந்ததும் ஐந்து கப் நீரூற்றி அரிசியை சேர்க்கவும். உப்பு, புதினா சேர்த்து நன்கு கிளறவும். குக்கரை மூடி ஆவி வந்ததும் வெயிட் போட்டு பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். தக்காளித் தொக்கு, மிண்ட் சட்னியுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக