18.மலபார் மீன் பிரியாணி
தேவையானவை :- வஞ்சிரம் மீன் - அரைக்கிலோ, பாசுமதி அரிசி - அரைக்கிலோ, மீன் மசாலா செய்ய :- பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன், மல்லித்தூள் - அரை டீஸ்பூன், யோகர்ட் - கால் கப், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்.
மீனை ஊறவைக்க:- மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, கடுகு, வெந்தயம் - சிறிது, உப்பு - அரை டீஸ்பூன். வெள்ளை மசாலா செய்ய :- தேங்காய் துருவியது - 2 டேபிள் ஸ்பூன், கசகசா - அரை டேபிள் ஸ்பூன், முந்திரி - 10, தாளிக்க :- நெய் - 2 டேபிள் ஸ்பூன், பட்டை - 2, ஏலக்காய், கிராம்பு - தலா 6, பொதினா கொத்துமல்லி - 2 கைப்பிடி, எலுமிச்சைச் சாறு - அரை டேபிள் ஸ்பூன். உப்பு - 2 டீஸ்பூன்.
செய்முறை:- அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து மீனில் நன்கு உரசித் தடவி அரைமணி நேரம் ஊறவைக்கவும். தேங்காய், கசகசா, முந்திரியை மைய அரைக்கவும். மீனை எண்ணெய் ஊற்றி லேசாக வறுத்து வைக்கவும். மீனை எடுத்துவிட்டு அதே பானில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை மென்மையாகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பொன்னிறமானதும் பச்சை மிளகாய், மல்லித்தூள் சேர்க்கவும். தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் தயிர் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் வறுத்த மீன் துண்டுகளைப் போட்டு மசாலா நன்கு படும்படிப் பிரட்டி வேகவைத்து இறக்கவும். இன்னொரு பானில் நெய் ஊற்றிப் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து ஊறவைத்த அரிசியைச் சேர்த்து வறுக்கவும். இதில் நாலு கப் தண்ணீர், பொடியாக அரிந்த புதினா மல்லித் தழைகள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து வேகவைத்து இறக்கவும். ஓவனை 200 டிகிரி முற்சூடு செய்யவும். ஒரு பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி சாதம், மீன் மசாலாவை லேயர் லேயராகப் பரப்பவும். மேலாக சாதத்தைப் பரப்பி அதன் மீது ஈரத்துணி விரித்து 180 டிகிரியில் வைத்து 25 நிமிடம் பேக் செய்யவும். வறுத்த வெங்காயம், முந்திரி, கிஸ்மிஸ் கொண்டு அலங்கரித்து மாங்காய் சட்னி, மிளகு அப்பளத்துடன் பரிமாறவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக