திங்கள், 29 ஏப்ரல், 2024

10.மலாய் ரஸ்க்

10.மலாய் ரஸ்க்


தேவையானவை:- வொயிட் ரஸ்க் – 10, பால் – முக்கால் லிட்டர், கற்கண்டு – கால் கப்., பரங்கி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-பாலில் கற்கண்டைப் போட்டு நன்கு காய்ச்சவும். மலாய் வர வர ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். பால் நன்கு சுண்டி வெதுவெதுப்பாய் இருக்கும் போது ஒரு ட்ரேயில் வொயிட் ரஸ்குகளைப் பரப்பி மலாயுடன் பாலையும் ஊற்றவும். அதன்மேல் பரங்கி விதைகளை வறுத்துத் தூவிப் பரிமாறவும்.   

சனி, 27 ஏப்ரல், 2024

9.க்ரிஸ்ப் வெஜ் ரோல்ஸ்

9.க்ரிஸ்ப்  வெஜ் ரோல்ஸ்



தேவையானவை:- ரஸ்க் – 16 , மைதா அல்லது கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன், முட்டைக்கோஸ் நீளமாகத் துருவியது – அரை கப், கேரட், பீன்ஸ் – ஒரு டேபிள் ஸ்பூன், வெங்காயத்தாள் – ஒரு டேபிள் ஸ்பூன், பொடியாக அரிந்த பூண்டு – 1 டீஸ்பூன், லெமன் க்ராஸ் – ஒன்று, சோயா சாஸ், தக்காளி சாஸ், க்ரீன் சில்லி சாஸ் – தலா ஒரு டீஸ்பூன். எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் பொடியாக அரிந்த முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள், லெமன் க்ராஸ், பூண்டு போட்டு வதக்கி சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், தக்காளி சாஸ் போட்டு நன்கு கலந்து இறக்கவும். ரோல்ஸ் செய்யும்போது ரஸ்குகளை ஒவ்வொன்றாக இரண்டு மட்டும் எடுத்து அதை நீரில் நனைத்து மைதா அல்லது கோதுமை தூவிய சப்பாத்திக் கல்லில் வைத்து லேசாகத் தட்டவும். கையில் ஒட்டினால் இன்னும் மாவு தூவி நடுவில் ஸ்டஃபிங்கை வைத்து இன்னொரு ரஸ்கால் மூடி மாவு தூவி ரோல் செய்யவும். சரிவர செய்ய வராவிட்டால் நனைத்த ரஸ்குகளில் மாவைப் போட்டுப்பிசைந்து ரோல் செய்து ஸ்டஃபிங் வைத்து உருட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும்.

திங்கள், 22 ஏப்ரல், 2024

8.க்ரஞ்சி கார்ன் சாலட்

8.க்ரஞ்சி கார்ன் சாலட்



தேவையானவை:- ரஸ்க் – 2 , வேகவைத்த சோளம் – அரை கப், சிறிய கேரட் – 1, வெள்ளரிக்காய் – 1, வெங்காயம்  நறுக்கியது – ஒரு டேபிள் ஸ்பூன், சாட் மசாலா – அரை டீஸ்பூன், காலா நமக் – கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – சிறிது, மிளகாய்ப் பொடி – கால் டீஸ்பூன்.

செய்முறை:- ஒரு பௌலில் வேகவைத்த சோளம், நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லித்தழையைப் போடவும். கேரட்டையும், வெள்ளரிக்காயையும் சிறிய கட்டங்களாக நறுக்கிப் போடவும். ரஸ்கை மீடியமாக உடைத்துப் போட்டு, காலா நமக், சாட் மசாலா, மிளகாய்ப் பொடி தூவி எலுமிச்சைச் சாறை ஸ்ப்ரே செய்து வேகமாகக் குலுக்கி உடனே பரிமாறவும்

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

7.மில்க் டோஸ்ட்

7.மில்க் டோஸ்ட்


தேவையானவை:- ரஸ்க் – 10 ஸ்லைஸ் அல்லது ஊட்டி வர்க்கி – 10. பால் - 2 கப், பனங்கல்கண்டு – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- பாலில் பனங்கல்கண்டைப் போட்டுக் காய்ச்சி ஆறவைக்கவும். ஒரு ப்ளேட்டில் ரஸ்கைப் பரப்பி அதன் மேல் வெதுவெதுப்பான இந்தப் பாலை ஊற்றிப் பரிமாறவும்.

திங்கள், 15 ஏப்ரல், 2024

6.க்ரூட்டன்

6.க்ரூட்டன்



தேவையானவை:- மினி ரஸ்க் அல்லது துண்டாக உடைக்கப்பட்ட ரஸ்குகள் – ஒரு கப், ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன், கருவேப்பிலை, கொத்துமல்லி – தூளாக்கியது – 1 டீஸ்பூன், பொடித்த மிளகு – அரை டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், லேசாக வதக்கிய முட்டைக்கோஸ் – கால்கப், மயோனிஸ் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- மினி ரஸ்கின் மேல் ஆலிவ் எண்ணெய், கருவேப்பிலை கொத்துமல்லிப் பொடி, பொடித்த மிளகு, உப்பு சேர்த்து நன்கு கலக்கி வெறும் பானில் இரண்டு நிமிடம் மிதமான தீயில் புரட்டி எடுக்கவும். ஒரு பௌலில் லேசாக வதக்கிய முட்டைக்கோஸைப் போட்டு அதன் மேல் க்ரூட்டன் ரஸ்கைக் கொட்டி மயோனிஸ் ஸ்ப்ரே செய்து பரிமாறவும்

சனி, 13 ஏப்ரல், 2024

5.மெல்பா டோஸ்ட்

5.மெல்பா டோஸ்ட்


தேவையானவை:- மெலிதான ரஸ்குகள் – 6, அமுல் பட்டர் – 6 டீஸ்பூன், தக்காளி ஜாம் – 6 டீஸ்பூன்.

செய்முறை:- ரஸ்குகளை லேசாக தவாவில் விட்டு சூடாக்கவும். ஆறியதும் ஒவ்வொரு ரஸ்கின் மேலும் அமுல் பட்டரைத் தடவி அதன் மேல் தக்காளி ஜாமைத் தடவிப் பரிமாறவும். ராஸ்பெர்ரி ஜாம், ஸ்ட்ராபெர்ரி ஜாமும் உபயோகிக்கலாம். மேலாக பீச் மெல்பா பழத்தை சிறிதாக வெட்டி அலங்கரிக்கலாம்.

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

3.ரஸ்க் மீல்மேக்கர் சாசேஜ்

3.ரஸ்க் மீல்மேக்கர் சாசேஜ்



தேவையானவை:- ரஸ்க் – ஒரு பாக்கெட், மீல்மேக்கர் ( சோயா சங்க்ஸ் ) – 30, சீஸ் – 50 கிராம் துருவியது, ஓமம் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், வெங்காயத்தாள் – அரைக்கட்டு, வெண்ணெய் – 20 கிராம், முட்டை – 2. உப்பு – அரை டீஸ்பூன், மைதா – ரோல் செய்ய, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- ரஸ்கை நொறுக்கி வைக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் ரஸ்க் தூளைத் தனியாக எடுத்து வைக்கவும். மீல்மேக்கரை வெந்நீரில் 3 நிமிடம் போட்டு நன்கு அலசிப் பிழிந்தெடுத்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும். ஒரு பானில் வெண்ணெயை உருகவைத்துப் பொடியாக அரிந்த வெங்காயத்தாளைப் போட்டு வதக்கவும். பானை இறக்கி வைத்து இதில் பொடித்த ரஸ்க், மீல்மேக்கர், துருவிய சீஸ், உப்பு, ஓமம், கடுகு, பொடித்த மிளகு இவற்றுடன் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் எடுத்துச் சேர்த்து நன்கு பிசையவும். முட்டை வெண்கருவை நன்கு அடித்து வைக்கவும். மாவை நீள சாசேஜ்களாக உருட்டி முட்டை வெண்கருவில் புரட்டி மைதாவையும் ரஸ்கையும் தூவித் தனித்தனியாக ட்ரேயில் அடுக்கி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்துத் தட்டையான பானில் எண்ணெய் ஊற்றி எல்லாப் பக்கமும் மொறுமொறுவென வரும்வரை பொரித்து இறக்கி சாஸ்களுடன் பரிமாறவும்.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

2.ரஸ்க் மஷ்ரூம் கட்லெட்

2.ரஸ்க் மஷ்ரூம் கட்லெட்



தேவையானவை:- ரஸ்க் – 8 ஸ்லைஸ், காளான் – 10,  பீட்ரூட், கேரட் – தலா ஒன்று, பெரிய வெங்காயம் சின்னது – 1 பொடியாக அரியவும். இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு – தலா அரை டீஸ்பூன், சோளமாவு, மைதாமாவு – தலா இரண்டு டீஸ்பூன். வெண்ணெய் – 2 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – 1 கைப்பிடி பொடியாக அரியவும். எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- காளானைக் கொதிக்கும் வெந்நீரில் 3 நிமிடம் போட்டு வடிகட்டவும். கேரட் பீட்ரூட்டைப் பொடியாகத் துருவவும். ரஸ்கைப்பொடிக்கவும். கட்லெட்டைப் புரட்டிப் போடுவதற்குச் சிறிது ரஸ்கைத் தனியாக எடுத்து வைக்கவும்.  இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பீட்ரூட், கேரட்டைப் போட்டு நன்கு வதக்கவும். பச்சை வாடை போனபின்பு, இதில் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். அத்துடன் வெண்ணெய், ரஸ்க் தூள், சிறிது சோளமாவு, மைதாமாவு போட்டுப் பிசையவும். இதை எலுமிச்சை அளவு எடுத்து உருண்டைகளாக்கி உள்ளே காளானை வைத்து மூடி நீள்வட்டமாகத் தட்டவும். சோளமாவு, மைதாமாவில் சிறிது மிளகாய்ப்பொடி, உப்புப் போட்டுக் கரைத்து அதில் கட்லெட்களை நனைத்து ரஸ்க் தூளில் பிரட்டி தவாவில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டுப் பொரித்தெடுக்கவும்

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

1.ரஸ்க் ஆலு டிக்கி

1.ரஸ்க் ஆலு டிக்கி


தேவையானவை:- ரஸ்க் – 4 ஸ்லைஸ், அவித்த உருளைக்கிழங்கு – 1, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- அவித்த உருளைக்கிழங்கில் பொடியாக அரிந்த வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் போட்டு ரஸ்கைப் பொடித்துப் போடவும். தண்ணீர் லேசாகத் தெளித்து அனைத்தையும் நன்கு பிசைந்து நெல்லி அளவு உருண்டைகளாக்கவும். எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு நன்கு கரகரப்பான மாலை நேரத்து ஸ்நாக்ஸாகக் கொடுக்கலாம்.